அலைபேசி விளையாட்டை தடை செய்ய வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !

அலைபேசி விளையாட்டை தடை செய்ய வேண்டும் !
கவிஞர் இரா .இரவி !

அலைபேசியில் விளையாடினால் பணம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்கின்றனர் .ஆசைப்பட்டு பலர் விளையாடுகின்றனர் .விளையாட்டுக்கு நுழைவுக் கட்டணமாக பணம் கூகுள் பே மூலம் பணம் செலுத்தச் .சொல்கின்றனர் . பலரும் பணம் செலுத்தி விளையாடுகின்றனர் .வென்றவருக்கு பரிசு என்கின்றனர் .இதில் வெல்வது கடினம் .பலரில் வெகு சிலரே வெல்கின்றனர் .இது சூதாட்டம் போல நடக்கின்றது .பலரும் இந்த வெளியாட்டை நடத்தி சத்தம் இல்லாமல் இளைஞர்களை சுரண்டி வருகின்றனர் .இந்த விளையாட்டு வன்முறை விதைக்கும் விளையாட்டு விளையாடுபவர்கள் சுடு ,கொல்லு .பாம் போடு என்று கத்திக் கொண்டே விளையாடுகின்றனர் .
இளையோரின் பணத்தையும் ,நேரத்தையும் விரையம் செய்யும் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் .

கருத்துகள்