ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
பிள்ளையார் பிடிக்க
குரங்காகி விடுகிறது
பிள்ளையார் ஊர்வலம் !
குரங்காகி விடுகிறது
பிள்ளையார் ஊர்வலம் !
பிறப்பும் இறப்புமற்ற
கடவுளுக்கு உண்டா
பிறந்த நாள் ?
கடவுளுக்கு உண்டா
பிறந்த நாள் ?
ஆற்றங்கரையில் இருந்தவரை
இல்லை பிரச்சனை
பிள்ளையார் !
இல்லை பிரச்சனை
பிள்ளையார் !
மனிதன் விலங்காகின்றான்
கடவுளின் பெயரால்
கலவரங்கள் !
கடவுளின் பெயரால்
கலவரங்கள் !
நூல்களை காணிக்கையாக்கினான்
பாரதி பெண்ணுரிமை கற்பித்த
நிவேதிதாவிற்கு !
பாரதி பெண்ணுரிமை கற்பித்த
நிவேதிதாவிற்கு !
தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா
ஊழல் !
தலை குனிந்து நில்லடா
ஊழல் !
அழியாது சொத்து
தமிழர்களுக்கு
சங்கத்தமிழ் நூல்கள் !
தமிழர்களுக்கு
சங்கத்தமிழ் நூல்கள் !
சங்கம் வைத்து மொழி
வளர்த்த ஒரே மொழி
தமிழ் !
வளர்த்த ஒரே மொழி
தமிழ் !
படித்தது போதும்
படைத்திடு வரலாறு
தமிழா !
படைத்திடு வரலாறு
தமிழா !
பறை சாற்றியது
ஆள்வோரின் திறமையின்மை
பெட்ரோல் விலையேற்றம் !
ஆள்வோரின் திறமையின்மை
பெட்ரோல் விலையேற்றம் !
கடல்களால் மட்டுமல்ல
வரிகளால் சூழ்ந்தது
இந்தியா !
வரிகளால் சூழ்ந்தது
இந்தியா !
நடைமுறைக்கு வரலாம்
விரைவில்
நிற்க வரி நடக்க வரி !
விரைவில்
நிற்க வரி நடக்க வரி !
இனி வாங்குவார்கள்
சுங்க வெறியோடு
சுவாச வரி !
சுங்க வெறியோடு
சுவாச வரி !
கருத்துகள்
கருத்துரையிடுக