காவல் ஆணையருக்கு ஒரு வேண்டுகோள் ! கவிஞர் இரா .இரவி !



காவல் ஆணையருக்கு ஒரு வேண்டுகோள் ! கவிஞர் இரா .இரவி !

தலைக்கவசம் விரும்புபவர்கள் அணியட்டும் .விரும்பாதவர்கள் அணியாமல் போகட்டும் .காவல்துறை தலைக்கவசம் அணியாததற்காக தடுப்பதையும் அபராதம் வாங்குவதையும் தடுத்து நிறுத்துங்கள் .மக்களைக் காக்க வேண்டிய காவல்துறை மக்களை கொலை செய்யும் துறையாக மாறி வருவது வேதனை .இதுவரை பல கொலைகள் தற்கொலைகள் போக்குவரத்து காவல்துறையால் நடந்து உள்ளன .  தலைக்கவசம் அணியாதவர்களைப்  பிடிப்பதில் காட்டும் வேகத்தை கொலைக்காரனைப் பிடிப்பதில்  கொள்ளைக்காரனை பிடிப்பதில் காட்டட்டும் .  காவல்துறை மீது மக்களின் மதிப்பு குறைந்து வருகின்றது .
தலைக்கவசம் அணிவதால் சிலர்க்கு பார்வை குறைகின்றது .காது கேட்பதில்லை .சளி நோய்களும்    வருகின்றன .தலைக்கவசம் அணிய வற்புறுத்துவது தனிமனித சுதந்திரத்தைப் பறிப்பதாகும்.
நகரத்திற்குள் வாகனம் ஓட்டுவதற்கு  தலைக்கவசம் தேவை இல்லை.
 இனிமேல் தலைக்கவசத்திற்காக வாகனத்தை நிறுத்த வேண்டாம் என்று அறிவுரை வழங்குங்கள் .மக்களுக்காகதான் சட்டம் .சட்டத்திற்காக மக்கள் அல்ல .

கருத்துகள்