கவிதை உறவும், வானதி பதிப்பகமும் இணைந்து நடத்திய விழாவில் பேராசிரியர் இரா மோகன் தொகுத்துள்ள எல்லோரும் நலம் வாழ (ஏர்வாடியார் சிந்தனைகள்) நூலை நீதியரசர் எஸ் ஜகதீசன் வெளியிட

கவிதை உறவும், வானதி பதிப்பகமும் இணைந்து நடத்திய விழாவில் பேராசிரியர் இரா மோகன் தொகுத்துள்ள எல்லோரும் நலம் வாழ (ஏர்வாடியார் சிந்தனைகள்) நூலை நீதியரசர் எஸ் ஜகதீசன் வெளியிட முதற் படியை வின் தொலைக்காட்சி அதிபர் டாக்டர் தேவநாதன் பெற்றுக்கொண்டார். தமிழ்வளர்ச்சித்துறை இயக்குனர் முனைவர் கோ விஜயராகவன், மொழிபெயர்ப்புத்துறை இயக்குனர் முனைவர் ந அருள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கவிதைஉறவு அன்பர்கள் வழங்கிய ரூ 1லட்சத்தை ஹார்வர்ட் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்காக டாக்டர் விஜய் ஜானகிராமனிடம் ஏர்வாடியார் வழங்கினார்.விழாவில் முனைவர் அமுதா பால கிருஷ்ணன்,முனைவர் வானதி ராம நாதன், கவிஞர் தமிழ் இயலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். விழாவுக்குப் பிறகும் வந்த தொகையோடு இதுவரை ரூ 2.50 லட்சம் வழ்ங்கப்பட்டுள்ளது உதவி உற்சாகப் படுத்திய பேராசிரியர் இரா மோகன் தம்பதியர்க்கு நன்றி 

கருத்துகள்