பசியாற்றி மகிழ்கிறாள்
கிராமத்து
பெண் வள்ளலார் !
பசுவிற்கான புல்லை
ஆட்டிற்கும் தந்துமகிழ்கிறாள்
உயிர்நேயம் !
தட்டிவிடாமல்
தந்து மகிழ்கிறாள்
நல்ல சிறுமி !
கால்களால் மிதித்தபோதும்
உணவளிக்கும் சிறுமி
வாழ்கிறாள் திருக்குறள் வழி !
நகரத்தில் தேய்கிறது
கிராமத்தில் வாழ்கிறது
நேயம் !

கருத்துகள்
கருத்துரையிடுக