படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஒரு சாட்டை
இரண்டு பம்பரங்கள்
மனம் இருந்தால் சுற்றலாம் !

சாட்டை இன்றியும்
சுற்றும் பம்பரம்
சுழற்றலாம் கையால்

சாட்டையின் தீண்டல்
வரும் வரை அமைதியாக
பம்பரம் !

சிறுவயதில் மட்டுமல்ல
இப்போது சுற்றினாலும்
தொற்றிக் கொள்ளும் மகிழ்ச்சி !

வழக்கொழியவில்லை
இன்றும்
உயிர்ப்போடு பம்பரம் !

கருத்துகள்