என்றும் வாழ்வான் பாரதி ! கவிஞர் இரா .இரவி !



என்றும் வாழ்வான் பாரதி ! கவிஞர் இரா .இரவி !

வான்புகழ் வள்ளுவருக்கு அடுத்து 
வந்த கவிஞர்களில் வான்புகழ் பெற்றவன் !

கவியரசர் என்பதனால் அவன் சந்தித்த 
புவியரசனிடமும் நூல்களையேப் பெற்றவன் !

சிட்டுக்குருவிகளை உள்ளபடியே நேசித்தவன் 
விட்டு விடுதலையாகிக் கவிகள் வடித்தவன் !
  
எட்டயபுரம் என்ற ஊரில் பிறந்து அவன் 
எட்டாத உயரம் பாடலால் தொட்டவன் !

முறுக்கு மீசைக்காரன் மட்டுமல்ல அவன் 
முண்டாசுக்   கட்டிய முத்தமிழ் வேந்தன் !

எளிய தமிழில் இனிய கவி யாத்தவன்
எல்லோருக்கும் புரியும்படி எழுதியவன் !

முப்பத்தியொன்பது ஆண்டுகள்தான் அவன் 
மூச்சு  இருந்தது  இன்று வரை பேச்சு உள்ளது !

கனகசுப்பு ரத்தினத்தின் குருவாகியவன்  
கவி பாரதி தாசனை உருவாக்கியவன் !

பன்மொழிகள் அறிந்திருந்த காரணத்தால் அவன் 
பைந்தமிழன் சிறப்பை செழிப்பை உணர்த்தியவன் !


பாரதி பாடிய பாடல்கள்  யாவும் என்றும் 
பா ரதியாக அழகிய பாடல்கள் ஆனது !

திருவல்லிக் கேணியில் வாழ்ந்து சிறந்தவன் 
செந்தமிழ்க் கேணியாக இருந்து வென்றவன் !

விடுதலை உணர்வை பாட்டால் விதைத்தவன் 
விடுதலை அடைந்துவிட்டதாகப் பாடியவன் !

பெண் விடுதலைக்கு பாடல்கள் செய்தவன் 
பெண்இன உயர்வுக்கு ஏணியானவன் !

அச்சமில்லை என்று பாடிய வீரமகன்
அன்பாய் குழந்தைப் பாட்டும் பாடியவன் !   

நூற்றாண்டு கடந்தும் இன்றும் வாழ்பவன் 
நூற்றாண்டு பல ஆனாலும் என்றும் வாழ்வான் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi



கருத்துகள்