தினமணி இணையம் தந்த தலைப்பு ! புறக்கணிப்பு ! !கவிஞர் இரா .இரவி !

தினமணி இணையம் தந்த தலைப்பு !

புறக்கணிப்பு !    !கவிஞர் இரா .இரவி !

நம்மை புறக்கணித்தவர்களிடம் திரும்பவும் 
நாம் கெஞ்ச வேண்டிய அவசிமில்லை !

புறக்கணித்ததற்காக வருந்தும் வகையில் 
புறம் சென்று வளர்ந்து காட்டுவோம் !

புற கணிப்பு தவறாக செய்து புறக்கணித்தோர் 
அக கணிப்பு அறியாதவர்கள் அவர்கள் !

வேண்டாம் என்று நினைத்தவர்களிடம் மறுபடியும் 
வேண்டி நிற்பது தன்மானத்திற்கு இழுக்கு !

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று 
மதியோடு சிந்தித்துச் சொல்லி வைத்தனர் அன்று !

நம்மை ஒதிக்கியவர்களிடம் வலிய  சென்று 
நம்மை சேருங்கள் என்று வேண்டுதல் வேண்டாம் !

விஷ்வரூப வளர்ச்சிக் கண்டு நம்மை 
விலக்கியவர்கள் நாளும் வருந்திட வேண்டும் !

புறக்கணித்தவர்களைப் புறத்தாக்குதல் செய்யாமல் 
பிரமாண்டமாக வளர்ந்து அகத்தாக்குதல் செய்வோம் !

ஏளனம் பேசி எள்ளி நகையாடியவர்கள் நமது 
எழுச்சி வளர்ச்சிக் கண்டு கூனிக் குறுகிட வேண்டும் !

தகுதியில்லை என்று நினைத்தவர்கள் முன்பு 
தகுதியை வளர்த்து பிரமிக்க வைக்க வேண்டும் !

எளியவன் என்று எளிதாக எண்ணியவர் முன் 
வலியவனாக வாழ்வில் வளர்ந்துக் காட்டுவோம் !

துட்சமாக நினைத்துத் தூக்கி எறிந்தவர்கள் முன்னே 
உச்சமாக உயர்ந்து தவறை உணர்ந்திட வைப்போம் !

தாழ்வுமனப்பான்மையைத் தகர்த்திடுவோம் 
தன்னம்பிக்கையை நாளும் வளர்த்திடுவோம் !

புறக்கணித்தவர்களின் கணிப்பைப் பொய்யாக்கி
புதுப்பாதையில் வெற்றி நடை போடுவோம் !

புறக்கணிப்பைத் தோல்வியாகக் கருத வேண்டாம் 
புறக்கணிப்பை வெற்றிக்கான முதல்படியாக்கிடுவோம் !



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்