நன்றி . தினமணி இணையம் -- வாக்கு உன் செல்வாக்கு : கவிஞர் இரா .இரவி

நன்றி  . தினமணி இணையம்
--
http://www.dinamani.com/kavithaimani/2016/04/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0/article3361153.ece
.

வாக்கு உன் செல்வாக்கு : 

கவிஞர் இரா .இரவி

By dn
First Published : 04 April 2016 12:00 AM IST

வாக்கு உன் செல்வாக்கு உண்மை
வாக்கை செல்வத்திற்கு விற்பது மடமை !

உலகின் மிகப்பெரிய மக்களாட்சி  நாடு
உன் உரிமையை உண்மையாக நிலை நாட்டிடு   !
மனதில் சிந்தித்து மனசாட்சிப்படி போடு
மற்றவர் சொல்வதற்காக போடுவதை விடு !
விழிகளை விற்று ஓவியம் வாங்கலாமா ?
வாக்குகளை விற்று பணம் வாங்கலாமா ?
சின்னமீனைப் போட்டு பெரியமீனைப் பிடிக்கும்
சின்ன்ப்புத்திக் காரர்களிடம் கவனம் வேண்டும் !
வாக்களிக்க வாங்கிடும் பணத்தால் நமக்கு
வருவது ஒரு நாள் இன்பம் ஐந்து வருடங்கள் துன்பம் !
தமிழகம் தவிர வேறு மாநிலங்களில் இல்லை
தமிழகத்திற்குத் தலைகுனிவு வாக்களிக்கப் பணம் !
ஏழ்மையை விலைபேசி ஏளனம் செய்கின்றனர்
ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்து காட்டுவோம் !
ஏழை பணக்காரன் வேறுபாடுகள் இன்றி
எல்லோருக்கும் உண்டு வாக்களிக்கும் உரிமை !
காமராசர் காலத்தில் சேவைகள் செய்தனர் அன்று
கணினி காலத்தில் ஊழல் செய்கின்றனர் இன்று !
அரசியலில் நேர்மை வாய்மை இருந்தன அன்று
அரசியலில் நேர்மை வாய்மை இல்லை  இன்று !
சாதியைப் பார்த்து வாக்களிக்கவில்லை அன்று
சாதியைப் பார்த்து வாக்களிக்கின்றனர் இன்று !
நல்லவர்கள் நின்றனர் தேர்தலில் அன்று
நல்லவர்களைத் தேட வேண்டியுள்ளது இன்று !
பொதுநல விரும்பிகள் இருந்தனர்  அன்று
தன்னல விரும்பிகள் பெருகினர் இன்று !
மக்கள் தொண்டை விரும்பினர் அன்று
தன் மக்கள் தொண்டை விரும்புகின்றனர்  இன்று !
கொள்கைக்காக வைத்தனர் கூட்டணி அன்று
கோடிகளுக்காக வைத்தனர் கூட்டணி இன்று !
அதிகபட்ச நல்லவர்கள் இருந்தனர் அன்று
குறைந்தபட்ச கெட்டவர் தேர்வு இன்று !
பணம் வாங்கி வாகளிக்கவில்லை அன்று
பணம் வாங்கி வாகளிக்கின்றனர் இன்று !
வாக்கு உன் செல்வாக்கு அதனை நீ
வாய்மையாக பணம் பெறாது பயன்படுத்து !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்