யாசகம்: வாசகர்கள் கவிதை

யாசகம்: வாசகர்கள் கவிதை



http://www.dinamani.com/kavithaimani/2015/12/08/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/article3167332.ecehttp://www.dinamani.com/kavithaimani/2015/12/08/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/article3167332.ece
யாசகம் கேட்பது இழிவு என்றாலும்
யாசகம் இல்லை எனல் அதினினும் இழிவு !
அன்றே உரைத்தார் நமது திருவள்ளுவர்
அதனை மனதில் கொள்வோம் !

வசதி படைத்தவர்கள் வளங்கெ வேண்டும்
வாடியோருக்கு வழங்கும் மனம் வேண்டும் !
ஏழ்மையினால் கேட்க நேரிட்டால்
இல்லை   என்று சொல்லாது வழங்குக !

கொடுத்துச்  சிவந்த கரங்கள் இங்கு உண்டு
இறந்தபின்னும்  வாழ்வு அவர்களுக்கு  உண்டு !
கர்ணன் அளவிற்கு கொடுக்காவிட்டாலும்
கையால் முடிந்ததைக் கொடுக்க வேண்டும் !

ஈகை குணம் மனிதனுக்கு அழகு தரும்
இரக்க மனம் மனிதனுக்கு மேன்மை தரும் ! 
பெற்றவர் பெரும் மகிழ்ச்சியை
பார்ப்பதும் மனதிற்கு இன்பம் தரும் !

தருமம் தலை காக்கும் என்றனர்
தருமம் தலையாய கடமையாக்கட்டும் !
எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தால்
எவரும் எவரிடமும் கேட்க வேண்டாம் !

ஏற்றத்தாழ்வற்ற சமதர்ம சமுதாயம்
இனிதே படைப்போம் வாருங்கள் !
யாசகம் யாரும் கேட்கவும் வேண்டாம்
யாசகம் யாரும் தரவும் வேண்டாம் !

. கவிஞர் இரா .இரவி

.

கருத்துகள்