சவூதி அரேபியாவில் இருந்து முகநூல் தோழி விஜயலட்சுமி மாசிலாமணி மின் அஞ்சலில் அனுப்பியது


சவூதி அரேபியாவில்இருந்து முகநூல் தோழி விஜயலட்சுமி மாசிலாமணி மின் அஞ்சலில் அனுப்பியது
மகாகவி பாரதியார் நாமம் வாழ்க!
இன்று - 11 - 12 - 2015 , மகாகவி பாரதி பிறந்தநாள் ( 134 வது ).
அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தில் இருந்து எழுத்தாளர்கள், எட்டயபுரம் சென்று பாரதியாருக்கு மரியாதை செய்கிறார்கள். பல வருடங்களாக இதை ஒரு புண்ணிய யாத்திரையாக எழுத்தாளர்கள் செய்து வருகிறார்கள்; நேற்று, அச்சங்கத்தின் செயலாளர் முனைவர் கோ.பெரியண்ணன் அவர்களிடம் பேசினேன். அச்சங்கத்தின் உறுப்பினராகிய நான் எனது வாழ்த்துக்களையும் , வணக்கத்தையும் கூறிக்கொண்டேன்.

இங்கே நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் .
11 - 12 - 2003 ஆம் ஆண்டு, நானும் மகாகவி பாரதியார் பிறந்த இடமான எட்டயபுரத்திற்குச் சென்று, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, வணக்கம் செலுத்தியிருக்கின்றேன்.
அன்று - கலைமாமணி விக்கிரமன் ஐயா அவர்கள் தலைமையில் , மகாகவி பாரதியார் பிறந்த மண்ணாம், எட்டயபுரத்தில், " பாரதி பணிச்செல்வர் விருது " பெற்றதும், எட்டயபுரத்தில் அவரது இல்லத்திற்குச் சென்று, அந்த மகான் வாழ்ந்த, நடந்த , கவிதை எழுதிய இடங்களையெல்லாம் பயபக்தியோடு பார்த்து மகிழ்ந்ததும் அற்புதமான தருணங்களாகும் என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.
" படுக்க, படைக்க இருந்தவளைப்
படிக்கச் சொன்னவன் பாரதி "
( எனது கவிதை நூல் " மூக்குத்திப்பூக்களில் " இருந்து )
பெண்கள் படித்ததனாலேயே , அச்சம் தவிர்த்து, உலகை வலம் வர முடிகிறது.!
சவூதி அரேபியாவில், ரியாத் தமிழ்ச் சொல்வேந்தர் மன்றம் , மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழாவினை
டிசம்பர் 12 ஆம் தேதி கொண்டாடவிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன் .
விஜிமா ,
சவூதி அரேபியா ,
( சமீபத்தில் கலைமாமணி விக்கிரமன் ஐயா அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்தினேன் )

கருத்துகள்