படித்ததில் பிடித்தது ! நன்றி திரு தமிழ் அரசு !
இன்றைய சிந்தனை..
.............................. ............
..............................
உணர்ச்சி வசப்படுகிறேன்..
.............................. .........................
..............................
ஜென்
மாணவன் ஒருவன், தன் குருவிடம் தன்னிடமுள்ள குறை ஒன்றை முறையிட்டு தீர்வு
காண முயன்றான்.‘நான் விரைவாக உணர்ச்சிவசப்படுகிறேன். அதிலிருந்து என்னால்
விடுபட முடியவில்லை என்றான்.,
‘உன்
பிரச்சனையின் தீவிரத்தை நான் இப்போது பார்க்க விரும்புகிறேன் என்றார் ஜென்
குரு.,முடியாது குருவே, நினைத்தவுடன் என்னால் காட்ட முடியாது..
‘சரி,
எப்போது காட்ட முடியும்..,‘சொல்ல முடியாது. அது எதிர்பாராமல்
நிகழ்வது..அப்படியானால் உனக்குள்ள பிரச்சனை இயற்கை குணத்தால் ஏற்பட்டதல்ல.
பெற்றோர் மூலமாக பிறக்கும்போது உருவானதும் அல்ல.
நினைத்த மாத்திரத்தில் உன்னால் அதைக் காட்டவும் முடியவில்லை. யோசித்துப் பார் என்றார் குரு.,
குணங்கள் பற்றிய எண்ணக் கருக்கள் மூன்று வகைப்படும்.
அவையாவன:
*கற்றலால் பெற்றுக் கொண்டவை,
*உணர்வுகள் மூலம் பெற்றுக் கொண்டவை,
*எண்ணங்கள் மூலம் பெற்றுக் கொண்டவை.
முதிர்ச்சி
அடைய அடைய எண்ணங்கள் மூலம் பெற்றுக் கொண்ட குணம் வலிமை பெறும். அதனால்தான்
குருவின் அறிவுரை ‘யோசித்துப் பார்’ என்றிருந்தது.
ஆம்,நண்பர்களே.,
உணர்ச்சியைக்
காட்டுவது வேறு, உணர்ச்சிக்கு அடிமையாகி உணர்ச்சிவசப்படுவது வேறு.அவசியம்
கருதி உணர்ச்சியைக் காட்டலாம். ஆனால் உணர்ச்சிவசப் படக் கூடாது.
காரணம்,
உணர்ச்சியைக் காட்டும்போது அது நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஆனால் உணர்ச்சிவசப்படும்போது
நாம் உணர்ச்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறோம்..
நாம் உணர்ச்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறோம்..
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.blogspot.in/
.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்
கருத்துரையிடுக