இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் அறிமுகம் !
கவிஞர் இரா .இரவி !
இவர் மதுரையின் பெருமைகளில் ஒன்றான தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில் M.A , M.PHILL படித்தவர் .படித்த படிப்பிற்காக பல வேலைகள் வந்த போதும் மறுத்துவிட்டு தான் விரும்பிய புகைப்படக் கலைஞராகவே வலம் வருபவர் .
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் மட்டுமல்ல ஆஸ்தான புகைப்படக் கலைஞர்.
புரட்சிக் கவிஞர் மன்றம் ,அகவிழி பார்வையற்றோர் விடுதி, முத்தமிழ் அறக்கட்டளை , மாமதுரைக் கவிஞர் பேரவை ,நிலா சேவை மையம் உள்ளிட்ட பல அமைப்புகளின் ஆஸ்தான புகைப்படக் கலைஞர்.
எனது முக நூலில் உள்ள படங்களில் 80 சதவிகிதப் படங்கள் இவர் கை வண்ணத்தில் வந்தவை .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்திற்கு 110 மாதம் தொடர்ந்து வந்து படங்கள் எடுத்தவர் .
முகநூலில் நண்பராக இருக்கின்றார் .படங்களை உடன் முக நூலிலும் பகிர்ந்து விடுவார் .கோபம் என்றால் என்னவென்று அறியாத இனியவர் .மிக அமைதியாகவும் ,அடக்கமாவும் இருப்பார். சில விழாக்கள் 5 மணி என்று சொல்லி 7 மணிக்கு தொடங்குவார்கள். மிகவும் பொறுமையாக இருப்பார் .பெரிய அளவில் எதற்கும் ஆசைப்படாதவர் .கொடுத்த பணத்தை இன்முகத்துடன் பெற்றுக் கொள்வார்.நல்ல நண்பர் .மிக நுட்பமாகவும் தெளிவாகவும் படம் எடுப்பதில் வல்லவர் .
இவரை உங்கள் விழாக்களுக்கு அழைக்க அலைபேசி எண்
.9344110230


கருத்துகள்
கருத்துரையிடுக