சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ஒருவரான முதுபெரும் எழுத்தாளர் திரு .இரா .கல்யாண சுந்தரம் அறிமுகம் ! கவிஞர் இரா .இரவி !
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ஒருவரான முதுபெரும் எழுத்தாளர் திரு .இரா .கல்யாண சுந்தரம் அறிமுகம் !
கவிஞர் இரா .இரவி !
திரு .இரா .கல்யாண சுந்தரம். வயது 76.வசதி இருந்தும் விசை வண்டி வாங்காமல் , மிதி வண்டியிலேயே இன்றும் பயணிப்பவர். மதுரையில் நடக்கும் இலக்கிய விழாக்களுக்கு அனுப்பானடியில் இருந்து மிதி வண்டியிலேயே வந்து விடுவார் .அவர் சொல்லும் காரணம் ."மிதி வண்டி உடல் நலத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் நல்லது ".தொழில் தொடர்பாக அடிக்கடி கேரளாவிற்கும் பயணித்தவர் .மலையாளம் அறிந்தவர் .
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் கிழக்கு பிரிவின் தலைவராக உள்ளார் .
55 ஆண்டுகளாக இதழ்களில் கவிதை ,கட்டுரை ,துணுக்கு எழுதி வரும் படைப்பாளி மட்டும் அல்ல .புகைப்படக் கலைஞர் .இலக்கிய விழாவிற்கு வருவது மட்டும் அல்ல படம் எடுத்து படங்களை நன்கொடையாக வழங்கி வருகிறார்.படங்களுக்கு பணம் தத்தாலும் வாங்க மாட்டார் . எனக்கும் படங்கள் தந்துள்ளார் .
இவர் எழுதாத இதழ் இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு பல்வேறு இதழ்களில் எழுதி வருபவர் .தினமலர் ,மதுரை மணி, ஓம் சக்தி உரத்த சிந்தனை ,எழுதி வருகிறார் .
முன்பு தேவி வார இதழ் ,இந்தியா டுடே ,சண்டே இந்தியன் உள்ளிட்ட இதழ்களில் எழுதி உள்ளார் .
கவிதை மாமணி வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் நடக்கும் கவியரங்குகளில் தொடர்ந்து கவிதை பாடி வருகிறார். இவரை சந்தித்தால் நமக்கும் ஊக்கம் பிறக்கும் .இவரது சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்ளும் .
35 ஆண்டுகளாக வீட்டு வாயிலில் அறிவிப்பு பலகை வைத்து தினமும் "தினம் ஒரு தகவல்" எழுதி வருபவர் .இது பற்றி பாராட்டி தி இந்து ஆங்கில நாளிதழில் செய்தி வந்தது
.
அகவிழி பார்வையற்றோர் விடுதியை நான் அறிமுகம் செய்து வைத்தேன் .அவரது நண்பர் தொழில் அதிபர் மூலம் நன்கொடை பெற்று வருடா வருடம் தீபாவளி புத்தாடைகள் வழங்கி வருகிறார். பல்வேறு சமூகப் பணிகளை மிக அமைதியாக செய்து வருகிறார் .இயங்கிக் கொண்டே இருக்கும் நல்ல மனிதர் வாழ்க பல்லாண்டு .
இவரை வாழ்த்த அலைபேசி எண் 9345222470 .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி



கருத்துகள்
கருத்துரையிடுக