ஹைக்கூ (சென்ரியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ (சென்ரியு ) கவிஞர் இரா .இரவி !

உலகக் கவிஞர்களின்
பொதுப் பாடுபொருள்
நிலவு !

சாக்கடையில் விழுந்தாலும்
ஒட்டவில்லை சகதி
நிலவு !

நடந்தேன் நடந்தது
நின்றேன் நின்றது
நிலவு !

அடம் பிடித்தது
குழந்தை
நிலவைக் கேட்டு !

மழை பொழிந்த வானிற்கு
பூக்கள் பூத்து
நன்று சொன்னது மரம் !

கற்றுத் தருகின்றன
கண் சிமிட்ட
நட்சத்திரங்கள் !

காலியான பானை
நிறைந்து இருந்தது
காற்று !

பறவைக்கு நன்றி
பாறை இடுக்கிலும்
முளைத்தது செடி !

கொக்கு
ஒற்றைக்கால் தவம்
மீனிற்காக !

மகரந்தம் உண்டது
பூவிற்கு வலிக்காமல்
வண்ணத்துப் பூச்சி !

அறியவில்லை
தன் எதிர்காலம்
சோதிடக் கிளி !

ஆய்வின் தகவல்
நலத்திற்குக் கேடு
நவீன உணவு !

விழா நாட்களிலும்
சோகத்தில்
ஆதரவற்றோர் விடுதி !

விரைவில் சாம்பலாவாய்
உணர்த்தியது
வெண் சுருட்டு !
.
குடையோடு சென்றான்
வரவில்லை
மழை !

புதைப்பதா எரிப்பதா
சண்டை கண்டு
ஓடியது பிணம் !

கருத்துகள்