மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மீனாட்சி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் கோலாகலமாக இளைஞர் எழுச்சி விழா நடந்தது
















மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மீனாட்சி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் கோலாகலமாக இளைஞர் எழுச்சி விழா நடந்தது .பள்ளியின் இயக்குனர் பொறியாளர் கே .முத்து ராஜு தலைமை வகித்தார் .இந்த வருடம் மட்டுமல்ல 2003 ஆம் ஆண்டு தொடங்கி வருடா வருடம் கொண்டாடி வருகிறார் .மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று கலாம் கே ஆர் .சுப்பிரமணி , பொறியாளர் கே .முத்து ராஜு , நான்ஆகியோர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம் .5000 அஞ்சல் அட்டைகளில் எழுதி பிரதமருக்கு அப்போதே அனுப்பி வைத்தோம் .இந்த நாள் இனிய நாள் .85 மாணவர்கள் மாமனிதர் அப்துல் கலாம் வேடம் இட்டு வந்தனர் .சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன் .
மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரைப் பற்றிய 5 பாடல்கள் அடங்கிய குறுந்தகடு கவிஞர் இரா .இரவி வெளியிட அகர்வால் மருத்துவமனை மருத்துவர் பெற்றுக் கொண்டார் .விழா ஏற்பாட்டை மதுரை மீனாட்சி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி இயக்குனர் பொறியாளர் கே .முத்து ராஜு செய்து இருந்தார் .மதுரை மீனாட்சி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் இசை ஆசிரியர் திரு .இரவி அவர்களின் மகன் திரு .சதாம் ராஜா மிகச் சிறப்பாக திரைப்படப் பாடல்கள் போல இசை அமைத்து உள்ளார் .பாடல்கள் ஒலிபரப்பானது.
மாணவ மாணவியரின் இசை நிகழ்ச்சி நடந்தது .இந்து முழுவதும் நிகழ்சிகள் நடைபெற்று வருகின்றன .

கருத்துகள்