லிமரைக்கூ !
கவிஞர் இரா. இரவி!
*****
மட்டற்ற கவிஞர் பாரதி
பாடலால் படைத்தான் புதுஉலகம்
பாட்டு ரதத்தின் சாரதி !
பாடலால் படைத்தான் புதுஉலகம்
பாட்டு ரதத்தின் சாரதி !
பார்க்கப் பரவசம் சிலை!
பார்ப்போர் உள்ளம் பறிபோகும்
என்றும் அழியாத கலை!
பார்ப்போர் உள்ளம் பறிபோகும்
என்றும் அழியாத கலை!
ஈடு இணையற்றவள் தாய்
தன்னை உருக்கி ஒளி தருவாள்
தாயால் வளரும் சேய் !
தன்னை உருக்கி ஒளி தருவாள்
தாயால் வளரும் சேய் !
சாதி
ஆதியில் இல்லை
வர்ணம் என்ற பெயரில் சிலரால்
பாதியில் படைத்திட்ட தொல்லை!
வர்ணம் என்ற பெயரில் சிலரால்
பாதியில் படைத்திட்ட தொல்லை!
நிலவின் இருப்பிடம் விண்
நாளும் ரசிப்போர் இங்கு பலர்
நிலவொளி விழுமிடும் மண்!
நாளும் ரசிப்போர் இங்கு பலர்
நிலவொளி விழுமிடும் மண்!
மதித்திடுக
என்றும் பெண்மை
உரிய மரியாதை நாளும் தருக
அவர்கள் உள்ளம் மென்மை!
உரிய மரியாதை நாளும் தருக
அவர்கள் உள்ளம் மென்மை!
வேண்டாம் சேலையில் பட்டு
வண்ணத்துப்பூச்சி நல்வாழ்க்கை இழந்தது
போனது உலகை விட்டு !
மழைக்குக் காரணி மரம்
விரும்பி நாளும் பேணி வளர்ப்போம்
மரம் வளர்ப்பு அறம் !
விரும்பி நாளும் பேணி வளர்ப்போம்
மரம் வளர்ப்பு அறம் !
பழி
போடாதே விதி மீது
விதியென்று ஒன்று இல்லவே இல்லை
மதியால் வெற்றிமாலை தோள்மீது !
விதியென்று ஒன்று இல்லவே இல்லை
மதியால் வெற்றிமாலை தோள்மீது !
வாழ்வை என்றும் விரும்பு
ரசித்து வாழ்ந்து பார் உனக்கு
வாழ்க்கை ஆகிடும் கரும்பு !
ரசித்து வாழ்ந்து பார் உனக்கு
வாழ்க்கை ஆகிடும் கரும்பு !
சோகம்
வேண்டாம் இனி
சோர்வைக் கொஞ்சம் தள்ளி வை
இன்பமே எந்நாளும் இனி !
சோர்வைக் கொஞ்சம் தள்ளி வை
இன்பமே எந்நாளும் இனி !
காந்தியடிகள் போற்றியது வாய்மை
நல்லதை மட்டும் என்றும் நினை
மனம் ஆகட்டும் தூய்மை !
நல்லதை மட்டும் என்றும் நினை
மனம் ஆகட்டும் தூய்மை !
தன்னம்பிக்கை
பெரும் சொத்து
எதை இழந்தாலும் பெற்று விடலாம்
வாழ்வின் வளர்ச்சிக்கான வித்து !
எதை இழந்தாலும் பெற்று விடலாம்
வாழ்வின் வளர்ச்சிக்கான வித்து !
உயர்வாக இருக்கட்டும் எண்ணம்
ஓயாமல் உழைத்து வந்தால்
வெற்றி கிட்டுவது திண்ணம் !
ஓயாமல் உழைத்து வந்தால்
வெற்றி கிட்டுவது திண்ணம் !

கருத்துகள்
கருத்துரையிடுக