படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா .இரவி ! நன்றி. திரு தமிழ் அரசு !

படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா .இரவி ! நன்றி. திரு தமிழ் அரசு !


-
இனிய வணக்கம்...
...................................

இன்றைய நாள் தங்களுக்கு உற்சாகமும்,
உத்வேகமும் தரும் நாளாக அமையட்டும்..

இன்றைய சிந்தனை..
............................................

நம் எண்ணம் போலவே...
..............................................

ஒரு குருவிடம் அவர் சிஷ்யன் ஒருநாள்,
'குருவே...நான்எப்படிவாழவேண்டும்..என்பதை..தெரிவித்தால்.. நலமாயிருக்கும்..'என்றான்.,

குருவும் தன் ஆயுட்காலம் முடிவதைஅறிந்து தன் சிஷ்யன் இனி தனியாக விவரங்களை தெரிந்துக்கொள்ளட்டும்..என்ற எண்ணத்தில் தூரத்தில் நொண்டிக்கொண்டே வரும் நரியைக் காட்டி..அதனுடன் செல்..அதற்கு உணவு எப்படி கிடைக்கிறது.. என்று பார்..

அப்போது..நீ எப்படி வாழவேண்டும் என்று தெரியும்..' என்றார்.,
நரியை தொடர்ந்து வந்த சிஷ்யன்..

தூரத்தே ஒரு சிங்கம் இறந்த மானின் உடலை இழுத்து வருவதை பார்த்து ஒளிந்துக் கொண்டான்.

அந்த மான் சிங்கத்தால் வேட்டையாடப்பட்டது.

அதை சிறிது தின்றுவிட்டு மீதத்தை நரியிடம் போட்டு விட்டு சென்றது சிங்கம்..

உடனே சிஷ்யனுக்கு ,

வாழவேண்டிய வழி தெரிந்தது போல இருந்தது..அடுத்தநாள் முதல்,சிஷ்யன் உண்ணாமல் யாரேனும் தனக்கு உணவு கொண்டுவந்து தருவார்கள் என காத்திருக்க ஆரம்பித்தான்..

நாட்கள் உருண்டன...

ஆனால்..யாரும் உணவை கொண்டுவந்து தரவில்லை..

அவன் உடல் இளைத்து.. தெம்பையெல்லாம் இழந்தான்..

குருவைத் தேடி வந்தான்.. நடந்த விஷயங்களைக் கூறி,
'குருவே..அந்த நரிக்கு கொடுத்தாற்போல் யாரேனும் எனக்கு உணவு கொண்டுவந்து தருவார்கள் என எண்ணினேன்..

ஆனால் யாரும் வரவில்லை என புலம்பினான்..

பதிலுக்கு..குரு,'அட..மடையா..நீ என்னிடம் எப்படி வாழவேண்டும் என்று கேட்டாய்...நானும் சொன்னேன்..
ஆனால்..நீ..சிங்கம்..நரியைப் பார்த்து..தப்பாய் புரிந்துக் கொண்டாய்..

உண்மையில்..நீ என்ன செய்திருக்க வேண்டும்..
சிங்கம் போல வாழ நினைத்திருக்க வேண்டும்..

மற்றவர்களுக்கு உதவியாய்,மற்றவர்களுக்கு, உணவளிக்கக் கூடியவனாய் இருக்க,எண்ணியிருக்க வேண்டும்'என்றார்.. 

அப்போதுதான்.. சிஷ்யனுக்கு..எப்படி வாழவேண்டும் என்பதற்கான விடை தெரிந்தது.,

ஆம்..,நண்பர்களே.,
யாரைப் போல ஆகனும்னு நினைக்கிறோமோ,
அப்படியே ஆவோம்கிறதுதான் உண்மை.
எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்..
நம் எண்ணங்களே செயல் வடிவமாக மாற்றம் பெறுகின்றன.
நாம் எண்ணாத எந்த செயலும் செயலாக உருப்பெறுவது இல்லை.
உங்கள் வாழ்க்கையையே நீங்கள் பாருங்கள்.
உங்களின் ஒவ்வொரு பெருமைபடக்கூடிய,
வளர்ச்சிக்கும்,வாழ்க்கைக்கும், உங்களது எண்ணமும்,
மனமும் தான் காரணமாய் உள்ளது என்பதை அறிவீர்கள்...

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்