உயர்திணை யார் ? கவிஞர் இரா .இரவி !
காட்டு விலங்குகள் ஒற்றுமையாய்
நாட்டு மனிதர்கள் வேற்றுமையாய்
உயர்திணை யார் ?
சிங்கமும் புலியும் சிநேகமாய்
மனிதனும் மனிதனும் பகையாய்
உயர்திணை யார் ?
பசிக்கும்போது இரை தேடும் விலங்கு
எப்போதும் இரை தேடும் மனிதன்
உயர்திணை யார் ?
சாதி மதச் சண்டை இல்லா விலங்குகள்
சாதி மதச் சண்டை இடும் மனிதர்கள்
உயர்திணை யார் ?
நன்றி மறவாத நாய்
நன்றி மறக்கும் மனிதன்
உயர்திணை யார் ?



கருத்துகள்
கருத்துரையிடுக