நமது மண் வாசம் இதழுக்கு வாசகர் மடல் !

நமது மண் வாசம் இதழுக்கு  வாசகர் மடல் !

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் .

 நமது மண் வாசம் ஜூன் 2015  மாத இதழ் வந்தது .தலையங்கம் உடன்பாட்டு சிந்தனை விதைத்தது .இதழ் ஆசிரியர் திரு ப .திருமலை அவர்களுக்கு பல வருட கால பத்திரிகை அனுபம் உள்ள காரணத்தால் இதழை சிற்பி சிலை செதுக்கும் நுட்பத்துடன் செதுக்கி உள்ளார். பாராட்டுக்கள் .
ஆல விளாம்பட்டி கிராமம் போல தமிழகம் முழுவதும் குடி இல்லா மாநிலமாக வேண்டும் என்பதே   மனிதநேய ஆர்வலர்கள் அனைவரின் விருப்பம் .

இக்கணமே தேவை சிக்கனமே பயனுள்ள ஆலோசனைகள் நன்று . தேவை யற்றதை வாங்கினால் தேவையானதை விற்க நேரிடும் என்ற பழமொழியை நினைவூட்டியது .
வேண்டவே வேண்டாம் குழந்தைத் தொழிலாளர் கட்டுரை விழிப்புணர்வை விதைத்தது .நம்நாட்டில் வறுமை இன்னும் ஒழிக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை .
வளர்ச்சி என்னும் வன்முறை உலகமயத்தின் தீங்கை படம் பிடித்தது கடலம்மா எங்களைக் காப்பாதம்மா  கட்டுரை உயிரைப்  பணயம் வைத்து  கடலுக்குச் செல்லும் மீனவர்களின் சோகம் உணர்த்தியது.

  இந்த நாடு மிகவும் விரும்பியது காந்தியடிகள் தியாகம் .ஆனால் காந்தியடிகள் மிகவும் விரும்பியது  தமிழச்சி தில்லையாடி வள்ளியம்மையின்   தியாகம் .அதை நன்கு படம் பிடித்தது .

.சங்க இலக்கியத்தில் புகழ்ந்து உள்ள வைகை இன்று  வறண்டு விட்டது .விழிப்புணர்வு   வந்தால் வைகை செழிக்கும் .

கரைந்து போகும் பெண் இனம் கட்டுரை புள்ளி விபரம் கண்டு அதிர்ந போனேன் . காட்டுமிராண்டிகளை   விட மோசமாக நாட்டு வாசிகள் பெண் சிசுக் கொலை புரிவது  வெட்கக் கேடு .மாற வேண்டும்.
 
நான் மிகவும் ரசிக்கும் கலை தோல் பாவைக் கூத்து .அது உள்பட பல கிராமியக் கலைகள்  நலிந்து அழிந்து  வருவது வேதனை.
பத்தமடை பாய்கள் தருவது நல்ல துக்கம் உண்மை .எது நல்ல சினிமா நல்ல சிந்தனை .இதழ் வெளியீட்டு விழா செய்தி நன்று . 

செவிலியர் திலகம் அருணா ஷான்பாக் கட்டுரை நெகிழ்ச்சி .கல்வி முறை குறித்து இளைய தலைமுறையினரின் அலசல் நன்று. அதிர்ந்து பேசாத பண்பாளர் சாகித்ய அகாதமி விருதாளர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு  மன்றத்தின் தலைவர் பொன்னீலன் அவர்களின் விருந்தினர் பக்கம் மிக விரும்பி படித்தேன் .காந்தியடிகள் விரும்பிய கல்வி சிந்திக்க வைத்தது .கலைமாமணி  
கு. ஞானசம்பந்தன்  அவர்களின் பயண அனுபவும் புதிய தகவல் .பிரதமருக்கான கடிதம் பயனுள்ள கடிதம் .ஆர் .கே . நகர் யாருக்கு வித்தியாசமான கட்டுரை .இனிப்பு நோய் பற்றிய பயனுள்ள தகவல்கள் பலருக்கும் பயன்படும் .அருணா சுந்தரராசன்   கவிதை நாட்டுநடப்பை விளக்கியது .மொத்தத்தில் அட்டை முதல் அட்டை வரை அற்புதம். இப்படி ஒரு இதழுக்காகதான் இவ்வளவு நாள் காத்திருந்தோம் மதுரையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டது நமது மண் வாசம் பாராட்டுக்கள் .

.இதழ் முகவரி !
நமது மண் வாசம் 
பட்டறிவு பதிப்பகம் ,

1 எ .வைத்தியநாதபுரம் கிழக்கு ,
கென்னட் குறுக்குத் தெரு ,
மதுரை .625016.
தொலைபேசி 0452- 2302566
மின் அஞ்சல் nmveditor@gmail.com
விலை ரூபாய் 20.



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்