தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !

தமிங்கிலப் பேச்சிற்கு முடிவு கட்டுவோம் !
தமிழோடு ஆங்கிலக் கலப்பின்றிப் பேசிடுவோம் !

ஆரம்பக்கல்வியை தமிழில் மட்டும் வழங்குவோம் !
அதன் பின் மற்ற மொழிகள் எதுவும் படிக்கட்டும் !

அப்பா அம்மா என்றழைப்பதைக் கட்டாமாக்கிடுவோம் !
டாடி மம்மி என்றால் தண்டத்தொகை வாங்கிடுவோம் !

குழந்தைகளுக்கு பெயர்களை நல்ல தமிழில் சூட்டுவோம் !
குழந்தைகளுக்கு சிந்திக்க தமிழைப் பயிற்றுவிப்போம் !

ஊடகங்களின் தமிழ்க் கொலையைத் தடுத்திடுவோம்  !
உரிமைகளைத் தமிழ் மொழிக்குப் பெற்றிடுவோம் !

விளம்பரங்களில்  வேற்று மொழிக்கு தடை விதிப்போம் !
விளம்பரப் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் அளிப்போம் !

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றாக்கிடுவோம் !
எம் தமிழன் பெருமையை உணர்த்திடுவோம் !  

உலக மொழிகளின் தாய்மொழி தமிழ் புரிய வைப்போம் !
உலக முதல்மொழி தமிழ் மூத்தது  தமிழ் அறிய வைப்போம் !

தமிழின் அருமையை தமிழருக்குக் கற்பிப்போம் !
தமிழ் மொழி போல இனிது  இல்லைஅறிவிப்போம் !

திருக்குறளை உடன் தேசிய நூலாக்க வேண்டும் !
தேசிய நூலாக்க தாமதிக்கும் சதியை முறியடிக்க வேண்டும் !

தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கிடுவோம் !
தமிழ் கல்வி மட்டுமல்ல வாழ்வியல் அறிந்திடுவோம் !

வாழும் தமிழ் அறிஞர்களின்  வாழ்நாளை நீட்டிப்போம் !
வாழும் காலமெல்லாம் போற்றிப் பாதுகாப்போம் !

படைப்பாளிகள் தமிங்கிலம் எழுதுவதை நிறுத்திடுவோம் !
படைப்பைக் கலப்பின்றி படைக்க வலியுறுத்துவோம் !

பிறமொழி இலக்கியங்களை தமிழாக்கம் செய்திடுவோம் !
பைந்தமிழ் இலக்கியங்களை பிறமொழியில் பெயர்த்திடுவோம் !

தமிழர் தமிழரோடு  தமிழில் மட்டும் பேசிடுவோம் !
தமிழர்கள் அனைவரும் சாதி மதம் விடுத்து சங்கமிப்போம் !
.

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்