நோபல் நாயகர் இரவீந்திரநாத் தாகூர் வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

நோபல் நாயகர் இரவீந்திரநாத் தாகூர் வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

எட்டு வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கி
எட்டாத உயரம் கவிதையால் அடைந்தவரே !

பாரிஸ்டர் பட்டம் நீங்கள் பெறவில்லை !
பெற்று இருந்தால் நோபலுக்கு வாய்ப்பில்லை !

நோபல் பணத்தால் உருவானது பல்கலைக் கழகம் !
நோபல் பரிசுக்குப் பெருமை பெற்றுத் தந்தவரே !

உலக நாடுகள் பல பயணித்த முதல் கவிஞரே !
உலகத்தை உற்று நோக்கி தந்த கவி தேனாறு !

பாடலாசிரியர் கவிஞர் ஓவியர் இதழாசிரியரே !
பன்முக ஆற்றலில் தனி முத்திரைப் பதித்தவரே !

காந்தியடிகளுக்கு   தேசப்பிதா பட்டம் தந்தவரே !
காந்தியடிகள் விரும்பிய இலக்கிய வேந்தரே !

தன்னம்பிக்கையின் சின்னம் விவேகானந்தருடன்
தன்னலமற்ற நட்பு   கொண்ட நல்லவரே !

வாலாபாக் படுகொலையைக் கண்டிக்கும் விதமாக
வழங்கிய சர் பட்டதை திருப்பி வழங்கியவரே !

நாட்டின் விடுதலைக்கு முன்பாகவே மறைந்திட்டாலும்
நாட்டின் விடுதலைக்குப்  பின்பும் நினைக்கப்படுபவரே !

இந்தியா வங்காளம் இரண்டு நாட்டின் தேசிய கீதமானது
இனிய கவிதைகளுக்கு  சாகாவரம் தந்தவரே !
 
அரசு விழாக்கள் அனைத்திலும் உமது பாடல் !
அரசும் மக்களும் நினைக்காத நாளே இல்லை !

தோன்றின் புகழோடு தோன்றுக வள்ளுவரின் வழி
தோன்றி புகழ் பல பெற்றவரே வாழ்க பல்லாண்டு !
--------------------------------------------------------------------------------
உன்னதப் பாடல்களால் என்றும் வாழ்பவர் இரவீந்திரநாத் தாகூர்     கவிஞர் .இரா .இரவி

கீதாஞ்சலி மூலம் கவிதாஞ்சலி வழங்கிய தாகூர்
கவிஞர்களின் இலக்கணமாக வாழ்ந்துக் காட்டியவர் தாகூர்

நோபல் பரிசுக்கே நோபல் பரிசுத் தந்தவர் தாகூர்
நோபல் பரிசின் மதிப்பை உயர்த்தியவர் தாகூர்

புகழை வெறுத்த முதல்க் கவிஞர் தாகூர்
போரை வெறுத்த இரண்டாம் புத்தர் தாகூர்

தாடியைக் கண்டதும் அனைவரின் நினைவுக்குத் தாகூர்
தந்தை பெரியார் அடுத்து நினைவிற்கு வருவார்

டயர் என்ற ராணுவ அதிகாரியின் காட்டு மிராண்டித் தனத்திற்காக
சர் பட்டத்தையும் சர் என்று தூக்கி எறிந்துக் கண்டித்தவர் தாகூர்

காந்தியடிகளுடன் மாணவர்கள் ஒத்துழையாமையில் வேறுபட்டாலும்
காந்தியடிகளின் நெறிக் கண்டு மகாத்மா பட்டம் தந்தவர் தாகூர்

தேவேந்திரநாத் தாகூரின் மகனாகப் பிறந்தார் தாகூர்
பதினான்காம் குழந்தையாகக் கடைசியாகப் பிறந்தார் தாகூர்

குழந்தையில் கதைகள் பலக் கேட்டு அறிவு வளர்த்து
குவளயத்தில் நாவலும் நாடகமும் கவிதையும் வடித்தவர்

கவிஞர் ஓவியர் நடிகர் எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றலோடு
கவிதைகளில் மட்டும் தனிப்பெரும் முத்திரைப் பதித்தவர்

இயற்கையை நேசிப்பதில் இயற்கையோடு ஒன்றானவர்
இந்தியாவின் பெருமைகளில் ஒன்றானவர் தாகூர்

குழந்தைப் பருவத்தில் பள்ளியைச் சிறையாக நினைத்தவர்
குழந்தைகளைக் குழந்தைகளாக வாழ விடுங்கள் குரல் தந்தவர்

மாலைப் பாடல்கள் எனும் முதல்  நூலின்   மூலம்
மலை என கவிதை மாமலை என உயர்ந்த கவிஞர் தாகூர்

வங்கத்து நாவல் எழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜியிடம்
வாழ்த்தும் பாராட்டு மழையும் மலர் மாலையும் பெற்றவர்

ஆடம்பரத்தை என்றும் விரும்பாத எளிமையின் சின்னம்
அன்பு நெறியை அகிலத்திற்கு உணர்த்திய  நல் அன்னம்

தாய்மொழிப் பற்று மிக்கவராகத் திகழ்ந்தவர் தாகூர்
ஆங்கில மோகம் அகற்றுக அன்றே உரைத்தவர் தாகூர்

சிலை வழிபாடு வேண்டாம் என்று சொன்னவர் தாகூர்
சக மதங்களைச் சாடுவது தவறு கூறியவர் தாகூர்

விலங்குகள் பறவைகள் எந்த உயிருக்கும் தீங்கு இழைக்காதீர்
வனங்களையும் மரங்களையும் ரசிக்க வைத்தவர் தாகூர்

பிற நாட்டின் மீது பகை வளர்க்கும் தேசபக்தி
பிற்போக்குத்தனமானது  என்று சாடியவர் தாகூர்

மூடப் பழக்கங்களை வெறுத்துப் பகுத்தறிவை நாடியவர்
மூச்சாகத் தாய்  மொழியை  நேசிக்கச் செய்தவர்

ஆங்கிலம் இத்தாலி எனப் பன்னாட்டு   மொழிகளில்
அகிலம் முழுவதும் பரவியது தாகூரின் படைப்பு

அயல்நாடுகளில் இந்தியாவிலிருந்து வருகிறோம் என்றால்
அற்புதக் கவிஞர் தாகூர்  நாட்டிலிருந்து வருகிறீர்களா? என்றனர்

உடலால் இவ்வுலகை விட்டு மறைந்திட்ட போதும்
உன்னதப் பாடல்களால் என்றும் வாழ்பவர் தாகூர்

-----------------------------------------------------------------------------------------------------

தாகூர் !          கவிஞர் இரா .இரவி !

மறுமலர்ச்சி நாயகர்
அரசியலை வெறுத்தவர்
தாகூர்

கவிஞர்களின் கவிஞர்
எழுத்தாளர்களின் எழுத்தாளர்
தாகூர்

கல்வியில் சீர்திருத்தம்
செயல்படுத்திக் காட்டியவர்
தாகூர்

நரபலியைச் சாடி
கவிதை கதை வடித்தவர்
தாகூர்

ஓவியமாக கவிதையும்
கவிதையாக ஓவியமும் படைத்தவர்
தாகூர்

உன்னை நீ அறிவாய்
உலகிற்கு உணர்த்தியவர்
தாகூர்

விளக்குகளை ஏற்றும்
ஆசிரிய விளக்கு
தாகூர்

தேசிய கீதங்கள் இயற்றியவர்
தேசியக் கவியாகத் திகழ்ந்தவர்
தாகூர்

பதினான்காவதாகப் பிறந்து
பார் போற்றும் கவிரானவர்
தாகூர்

மாதிரிப் பள்ளி தொடங்கி
முன் மாதிரியானவர்
 தாகூர்

இந்திய வரலாறு எழுதி
உலக வரலாறு ஆனவர்
 தாகூர்

யுகங்கள் கடந்து வாழும்
யுகம் வென்ற கவி
 தாகூர்
 

.

கருத்துகள்