கவியமுதம் !
ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !
நூல் விமர்சனம் :பா.வெங்கடேஷ் ! ( G.R.T).
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com இணையம் www.vanathi.in
கவிஞர் ரவி அவர்களின் 14 வது நூலான கவியமுதம் படித்து பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் , இதோ நூலைப்பற்றி என் பார்வை
ஹைகூ கவிதை மட்டும் போதும் என்று தன் எல்லையை வகுத்துக்கொள்ளாமல் புதுக்கவிதை புனைவதிலும் முயற்சி செய்து புதிய உச்சத்தை அடைந்திருக்கிறார் கவிஞர் ;
புத்தகத்தின் முகப்பிலேயே முனைவர் வெ.இறையன்பு மற்றும் பேராசிரியர் இரா.மோகன் அவர்களின் அணிந்துரை நூலுக்கு அழகு ...
தமிழ் , தமிழர் நலன் என்ற தலைப்பில் தமிழின் தொன்மையும் ,அழகையும் நயமாக பாடியிருக்கிறார்...
“ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு
ஒப்பற்ற தமிழுக்கு பிறமொழி கலப்பு நஞ்சு ”
இல்லங்களில் தமிழ் பேச்சை குழந்தைகள் கடைபிடிக்கவும்,பெயர்களில் தமிழை பயன்படுத்தவும் அன்பாக கட்டளையிடுகிறார்.
கவிஞர் தான் நடந்து சென்று கொண்டிருக்கும் பாதையின் வழிகாட்டியான தந்தை பெரியார் முதல் நீதியரசர் சந்துரு வரையான சான்றோர்கள் பற்றிய போற்றுதல் அவருடைய விசாலமான சிந்தனைக்கு உதாரணம் ;
தமிழ்மொழிப்பற்று , திருக்குறள் தேசிய நூலாக வேண்டுகோள் , சமூக அக்கறை இவைகளைத் தாண்டி கவிஞரின் உள்மனதில் நிழலாடும் காதல் சிந்தனைகளை அழகிய பாக்களாக வடித்துள்ளார் ..
“மனிதனை மனிதனாக வாழவைப்பது புத்தகம்
மண்ணில் உள்ள சொர்க்கம் புத்தகம் “
இவ்வரிகள் மூலம் புத்தக வாசித்தல் விழிப்புணர்வை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துக் கூறுகிறார்.
என்றும் சுறு சுறுப்பாகவும் , இளமையாகவும் இயங்கிக்கொண்டிருக்கும் கவிஞர் ரவி அவர்கள் கவியமுதம் போன்ற மேலும் பல அமுதசுரபிகளை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அளித்திட வேண்டுகிறேன் ..


மிக்க நன்றி
பதிலளிநீக்கு