விரைவில் மறக்கடிப்பார்கள்கவிஞர் இரா. இரவி
அண்டை நாடு இலங்கை இரக்கமின்றி
தமிழர்களைச் சுட்டு வீழ்த்தியது
அண்டை நாடு இலங்கை இரக்கமின்றி
தமிழர்களைச் சுட்டு வீழ்த்தியது
இலங்கையைத் தட்டிக் கேட்கும் துணிவு
இந்தியாவிற்கு என்றுமே இருந்ததில்லை.
இந்தியாவிற்கு என்றுமே இருந்ததில்லை.
அண்டை மாநிலம் ஆந்திரமும் இரக்கமின்றி
தமிழர்களைச் சுட்டு வீழ்த்தியது
தமிழர்களைச் சுட்டு வீழ்த்தியது
வீழ்வது தமிழர்கள் என்பதால்
வாய் திறக்க ஆள் இல்லை
வாய் திறக்க ஆள் இல்லை
உலகையே ஆண்ட இனம் தமிழினம்
உலகம் முழுவதும் வதைபடுகிறான் தமிழன்
உலகம் முழுவதும் வதைபடுகிறான் தமிழன்
தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை
தட்டிக் கேட்க நாதியும் இல்லை
தட்டிக் கேட்க நாதியும் இல்லை
தலைவர்கள் எல்லாம் இன்று
தன்னலவாதிகள் ஆனார்கள்
தன்னலவாதிகள் ஆனார்கள்
தன் குடும்பம் தன் வளம் என்று
தன்னல ஆசைக்கு அடிமையானார்கள்
தன்னல ஆசைக்கு அடிமையானார்கள்
பொதுநலம் பற்றி பேசக்கூட
பயப்படுகின்றனர் எல்லோரும்
பயப்படுகின்றனர் எல்லோரும்
குருவிகள் சுடுவதே குற்றம் என்று
கூறுகின்றது நாட்டில் உள்ள சட்டம்
கூறுகின்றது நாட்டில் உள்ள சட்டம்
குருவி சுடுவதைப் போல
தமிழர்களைச் சுட்ட காட்டுமிராண்டிகள்
தமிழர்களைச் சுட்ட காட்டுமிராண்டிகள்
மனித உரிமை மீறல் நடந்துள்ளது
மனிதாபிமானமற்ற படுகொலை நடந்துள்ளது
மனிதாபிமானமற்ற படுகொலை நடந்துள்ளது
விசாரணை என்ற பெயரில் நாள் கடத்தி
விரைவில் மறக்கடிப்பார்கள்.
விரைவில் மறக்கடிப்பார்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக