"அகவிழி" பார்வையற்றோர் விடுதியும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்

"அகவிழி" பார்வையற்றோர் விடுதியும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்

15 .3. 15 ஆம் தேதி காலை மதுரை k. புதூர் பகுதியில் உள்ள   பார்வையற்ற நண்பர் திரு மு பழனியப்பன் அவர்களது மூன்றாம் பார்வை அறக்கட்டளையின் "அகவிழி" பார்வையற்றோர் விடுதியும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமை முனைவர் ,கவிஞர் , காவல் துறை உதவி ஆணையர் ஆ .மணிவண்ணன் அவர்கள் தலைமை வகித்து தொடக்கி வைத்தார் .கவிஞர் இரா .இரவி முன்னிலை வகித்தார் .அகவிழி" பார்வையற்றோர் விடுதி நிறுவனர் திரு மு பழனியப்பன் வரவேற்றார் 

 பார்வையற்றதிரு R.கார்த்திக் கண் தானம் பற்றிய புள்ளி விபரங்கள்  சொல்லி கண் தானம் பற்றிய விழிப்புணர்வு விதித்தார் 

மருத்துவ சிகிச்சை அளிக்க வந்த மருத்துவ அதிகாரி திரு ஹேமந்த் அவர்கள் ஒருவர் கண் தானம் செய்தால் .பார்வையற்ற 4 பேருக்கு பார்வை கிடைக்கும் என்ற புதிய தகவல் சொல்லி திருக்குறள் மேற்கோள் காட்டி பேசினார் .மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் தனியார் மருதுமனைகளை விட சிறப்பான சேவை செய்து வருகிறோம் .அனைவரும் தயக்கம் இன்றி  வருக என்றார் .

 கண் சிகிச்சை  தொடர்பான தொழில் நுட்ப உதவியாளர் திரு பாஸ்கரன் ,இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் ,அகவிழி கணினி ஆசிரியர் இந்திரா , டோக் பெருமாட்டி கல்லூரி மாணவி மஞ்சுளா ஆகியோர் கண் சிகிச்சை முகாம் வெற்றி பெற உதவினார்கள் .புதூர் வாழ் பொது மக்கள் பலரும் வருகை தந்து கண் சிகிச்சை பெற்றனர்

அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் திரு மு பழனியப்பன் அவர்களின் அம்மா ,மனைவி ,மகள் யாழினி உள்பட குடும்பமே ஒத்துழைப்பு தந்தனர் .  

தொடர்புக்கு:மு.பழனியப்பன்,அகவிழி பார்வையற்றோர் விடுதி, எண் 1,ராமவர்ம நகர் 3வதுத் தெரு,கே.புதூர்,மதுரை 625007,தொலைபேசி 98651 30877, 0452_2681877



கருத்துகள்