முக நூலில் படித்ததில் பிடித்தது .நன்றி முனைவர் ,கவிஞர் , காவல் துறை உதவி ஆணையர் ஆ .மணிவண்ணன் அவர்கள் முக நூல்
முக நூலில் படித்ததில் பிடித்தது .நன்றி முனைவர் ,கவிஞர் , காவல் துறை உதவி ஆணையர் ஆ .மணிவண்ணன் அவர்கள் முக நூல்
இன்று 15 3 15 ஆம் தேதி காலை மதுரை k. புதூர் பகுதியில் மதுரை கவிஞர் திரு இரா. ரவி அறிமுகப்படுத்திய கண் பார்வையற்ற நண்பர் திரு மு பழனியப்பன் அவர்களது மூன்றாம் பார்வை அறக்கட்டளையின் "அகவிழி" பார்வையற்றோர் வடுதியில் பழனியப்பன் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமைத் தொடங்கி வைத்தேன்.
வரவேற்புரை பார்வை குறைபாடுடைய திரு R.கார்த்திக் வழங்கினார்.அவருடைய பேச்சினைக் கேட்டு அசந்து போனேன்.கண் குறைபாடு சம்பந்தமாக நான் இதுவரை அறியாதக் கருத்துக்களை புள்ளிவவரங்களுடன் நல்ல பிற மொழிக் கலப்பில்லாத தூய தமிழில் பேச பேச வியந்தேன்.
மருத்துவ சிகிச்சை அளிக்க வந்த மருத்துவ அதிகாரி திரு ஹேமந்த் அவர்கள் இளைஞராக இருப்பினும் மருத்துவரில் மாணிக்கமாகத் தொண்டுள்ளத்துடன் கலந்து கொண்டது எனக்கு கூடுதல் வியப்பாக இருந்தது கண்டு உளம் மகிழ்ந்து வாயார பாராட்டினேன்.
கண் பார்வையற்றவர் அறக்கட்டளை நடத்தி பார்வையற்றோருக்கான 37 பேருக்கு விடுதி எந்தவித அரசு உதவியின்றி சில தனியாரிடம் உதவிப் பெற்று நடத்தி வருவதால் அவரது சேவையைப் பாராட்டி பெருமையடைந்தேன்.
வெளிப்படையாக வீரம் பேசாமல் அவரது தொண்டிற்கு உதவ மனதில் உறுதியேற்றேன்.
தொடர்புக்கு:மு.பழனியப்பன்,அகவி ழி பார்வையற்றோர் விடுதி, எண் 1,ராமவர்ம நகர் 3வதுத் தெரு,கே.புதூர்,மதுரை 625007,தொலைபேசி 98651 30877, 0452_2681877.
அவர்கள் சிறப்பு அழைப்பாளர் என்பதால் சால்வை அணிவிக்க முயற்சித்தனர். அன்பு போதும். நான் தான் உங்களுக்காக உழைக்க வேண்டும், பாராட்ட வேண்டும் என மறுத்து விட்டேன்.
எத்துணையோ நிகழ்ச்சி செல்லும் போது பெருமைப்பட்டாலும் இத்தகைய நிகழ்ச்சிகள் மனதினை வருடுவதாக உள்ளது.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி




கருத்துகள்
கருத்துரையிடுக