படைப்பாளிக்கு இதுதான் மகிழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !

படைப்பாளிக்கு   இதுதான் மகிழ்ச்சி !     கவிஞர் இரா .இரவி !

காலையில் நடைப் பயிற்சி செல்லும்போது தேநீர் கடையில் நின்ற ஒருவர் என்னைப் பார்த்து நீங்கள் கவிஞர் இரவியா ? என்று கேட்டார் .ஆம்   என்றேன் .உங்களுடைய' கவிதையல்ல விதை' நூல் கடையில் வாங்கிப் படித்தேன் .கவிதைகள் மிக நன்றாக இருந்தது. பின் கவிதையல்ல விதை 10 நூல்கள் வாங்கி மாணவர்களுக்கு பரிசளித்தேன் என்றார் .அவர் பெயர் ரீகன் .சொந்த ஊர் நத்தம் மதுரையில் தொழில் செய்து வருவதாக சொன்னார் .   2007  ஆண்டு வெளியான நூலிற்கு தற்போது முகம் அறியாத வாசகரின் பாராட்டு மன மகிழ்ச்சி தந்தது .அவரிடம் 14 வது நூல் கவியமுதம் வானதி பதிப்பக வெளியீடாக வந்துள்ள தகவலையும் சொன்னேன் .  

.

கருத்துகள்