பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! துரோகம் ! கவிஞர் இரா .இரவி !

பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு !


துரோகம் !   கவிஞர் இரா .இரவி !

இழைத்தவனை 
மன்னிக்கும் உள்ளம் பெறுக
மண்ணில் நிம்மதி நிலவும் !

பழிக்குப் பழி வாங்குவது 
விலங்குகள் குணம் 
மன்னிப்பது மனித குணம் !

அன்றே மறந்திடுக 
அன்றே உரைத்தார் திருவள்ளுவர் 
மறதியும் நன்மை பயக்கும் !

மனதில் காயம் இருக்கலாம் 
மறதி மருந்தாகும் 
நினைவு ரணமாக்கும் !

தீங்கு   செய்தவனை 
மன்னித்துப் பாருங்கள் 
மனம் திருந்துவான் !

காரணி தன்னலம் 
காரணம் இயந்திரமயம் 
கொல்கின்றனர் மனசாட்சி ! 




.

கருத்துகள்