கவிஞர் இரா .இரவி எழுதிய நூல் விமர்சனம் படித்து விட்டு நூல் ஆசிரியர் வரைந்த மடல் .


கவிஞர் இரா .இரவி எழுதிய நூல் விமர்சனம் படித்து விட்டு நூல் ஆசிரியர் வரைந்த மடல் .

வாழ்த்துரை : பாவலர் தேவகி ஆனந்து,
20, மல்லிகை தெரு, வானொலி நகர், உழவர்கரை, புதுச்சேரி – 605 010
பேசி : 94852 64395
*****
அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய கவிஞர் இரா. இரவி அவர்கட்கு தேவகி ஆனந்து எழுதும் கடிதம்.
நாட்கடந்து கடிதம் எழுதுவதற்கு முதற்கண் தங்கள் மன்னிப்பைக் கோருகின்றேன்.
ஐயா! என் வேண்டுகோளுக்கிணங்க, பல பணிகட்கு இடையில் என்
“மரபு மலர்கள்”" என்னும் கவிதை நூலுக்கு மிகச்சிறந்த நூலாய்வினை எழுதி அனுப்பிய தங்கட்கு நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகின்றேன்.
நூல் கட்டமைப்பு, அணிந்துரை, தகவுரை பற்றியும் பாராட்டி, என்னையும், என் நூலினையும் பாராட்டி உள்ளீர்கள்.  தங்களின் பாராட்டும், பரந்த மனப்பாங்கு, தங்களின் பண்பட்ட உயர்ந்த உள்ளத்தைக் காட்டுகிறது.
தாங்கள் கவிதைகளை எடுத்துக்காட்டி விளக்கியிருந்த முறை வெகுசிறப்பு.
என் கவிதைகளை விட தங்களின் நூலாய்வே மிகச் சிறப்பாக உள்ளது.  தாங்கள் என் நூலுக்கு ஆய்வுரை எழுதித்தந்தது எனக்கு மிக்க மகிழ்வினைத்  தந்தது; ஏன்? பெருமையாகக் கூட உள்ளது.  தாங்கள் எனக்குச் செய்த பேருதவிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இரா. இரவி, கவிமலர் தொகுப்பில், என் பெயரையும் “மரபுமலர்கள்” அட்டைப்படங்களையும் சிறபபான முறையில் வெளியிட்டு, நூலாய்வினைப் பதிவு செய்துள்ளீர்கள் ; பார்த்து அகம் மிக மகிழ்ந்தேன் ; தங்கள் உதவிக்குக் கைம்மாறு செய்ய இயலாநிலையில் உள்ளேன் ; நன்றி கூறுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
தங்கள் தமிழ்த்தொண்டு சிறக்க வாழ்த்தி மகிழ்கின்றேன்.  நீடூழி நீவீர் வாழ்க! வாழ்க!!

07-02-2015                                      அன்புடனும், நன்றியுடனும்
புதுச்சேரி-10                                           தேவகி ஆனந்து

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்