மதுரையில் நகல் எடுக்கும் கடைகளில் ! கவிஞர் இரா .இரவி !

மதுரையில் நகல்   எடுக்கும் கடைகளில் ! கவிஞர் இரா .இரவி !

மதுரையில் நகல்   எடுக்கும் கடைகளில் வெளியே  விளம்பரப் பலகையில்   .  நகல்   எடுக்க 35 பைசா என்று விளம்பரம் செய்து உள்ளனர் .உள்ளே சென்று நகல் எடுக்க வேண்டினால் நகல் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்கின்றனர் .வெளியே  நகல்   எடுக்க 35 பைசா என்று எழுதி இருக்கே என்று கேட்டால், 5000 நகலுக்கு மேல் எடுத்தால் 5001 லிருந்து நகல்   எடுக்க 35 பைசா என்கின்றனர் .இது ஒரு ஏமாற்று  விளம்பரமாக உள்ளது .எல்லோரும் 5000 க்கு மேல் நகல் எடுக்க முடியுமா ? தேவை இருக்காது . 35 பைசா என்று நினைத்து  நகல் எடுக்க வந்து கல்லூரி மாணவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.10 நகலுக்கு மேல் எடுத்தால் 11 லிருந்து நகல்   எடுக்க 35 பைசா என்று வாங்கினால் மாணவர்களுக்கு பயன் கிடைக்கும் .

கருத்துகள்

கருத்துரையிடுக