நீதியரசர் கிருஷ்ணய்யர் நினைவைப் போற்றும் நிகழ்வு !
நீதியரசர் கிருஷ்ணய்யர் அவர்கள் 100 வது பிறந்த நாள் விழா கொண்டாடி முடித்து வாழ்வாங்கு வாழ்ந்தவர் .இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக இறுதி மூச்சு உள்ளவரை குரல் தந்த மனிதநேயர் , மாமனிதர். அவரது இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு . உடனடியாக அவரது நினைவைப் போற்றும் விதமாக மதுரை எட்வர்ட் மன்றத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது .எட்வர்ட் மன்றத்தின் செயலர் இஸ்மாயில், கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் தலைவர் இரா .சொக்கலிங்கம், பாரதி தேசியப் பேரவையின் தலைவர் ஜான் மோசஸ் ,கவிஞர்
இரா .இரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்
கருத்துரையிடுக