சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே ! கவிஞர் இரா .இரவி !

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே !
கவிஞர் இரா .இரவி !

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்று 
சொல்லியது பன்மொழி அறிஞர் பாரதியார் !

உலகின் முதல்  மொழி தமிழ் என்று 
உரைப்பது  தமிழனன்று அமெரிக்கா ஆய்வாளர் !

உறவுகளுக்கு என்று பலவிதமான சொற்கள் 
உன்னத தமிழ் மொழியில் ஏராளம் !

 அடுக்கு மொழியில் அள்ளி விட சொற்கள் 
ஆயிரக்கணக்கில் அழகு தமிழில் உண்டு !

தமிழ் !தமிழ் !தமிழ் ! என்று உச்சரித்துப் பாருங்கள் 
அமிழ்து ! அமிழ்து !  என்று ஒலி கேட்கும் !

முத்தமிழுக்கும் மகுடமாக விளங்குவது சொற்கள் 
முக்காலமும் வாழும் ஒரே மொழி தமிழ்மொழி  !

ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு 
ஒரு சொல் கூட பொருள் இன்றி இல்லை !

ஓர் எழுத்து சொல்லுக்கும் பொருள் உண்டு 
இரு நூற்றி நாற்பத்தேழு எழுத்துக்கள் உண்டு !

உயிர் எழுத்து மெய் எழுத்து உயிர்மெய் எழுத்து 
மூவகை  எழுத்துக்களின் சுரங்கம் தமிழ் மொழி !

பிறமொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி 
பிறக்கும்போதே சிறப்போடு பிறந்த மொழி !

பன்மொழி அறிஞர்கள் பாராட்டும் தமிழ்மொழி 
பன்னாட்டு அறிஞர்கள் போற்றிடும் தமிழ்மொழி !

உலக உயிரினங்கள் உச்சரிக்கும் அம்மா தமிழ் 
உலகமே போற்றிடும் உன்னத மொழி தமிழ்மொழி !

கருத்துகள்