மூத்த பத்திரிகையாளர் பொன் .கிருஷ்ணசுவாமி நினைவைப் போற்றும் நிகழ்வு ! தொகுப்பு கவிஞர் இரா . .இரவி !

மூத்த பத்திரிகையாளர் பொன் .கிருஷ்ணசுவாமி நினைவைப் போற்றும் நிகழ்வு ! தொகுப்பு கவிஞர் இரா . .இரவி  !



மூத்த பத்திரிகையாளர் பொன் .கிருஷ்ணசுவாமி இலங்கையில் பிறந்தவர் சிங்கள இன வெறி போராட்டத்தின் காரணமாக தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து இந்தியன்   எக்ஸ்பிரஸ் நாளிதழில் பணி புரிந்து   ஒய்வு பெற்ற பின்னும்   பல்வேறு தொண்டுகள் செய்தவர்    ஆங்கிலம் தமிழ் இரண்டு   மொழியிலும் புலமைமிக்கவர் தமிழ்ப்பற்று மிக்கவர் .பாரதியார் பாடல்களை நேசித்தவர் .பல்வேறு தலைவர்களை நேர்முகம் கண்டவர் .பல பத்திரிகையாளர்களுக்கு உதவிகள் செய்தவர் .வாழ்வாங்கு வாழ்ந்தவர் .

இவர் மறைந்தவுடன் நடந்த இரங்கல் கூட்டத்தில் பலரும் அவரது பணியினை ,  தொண்டைப் பாராட்ட கேள்விப்பட்ட அவரது குடும்பத்தினர் அவரது நினைவைப் போற்றும் வண்ணம் வருடா வருடம் ஒரு மூத்த பத்திரிகையாளருக்கு விருது வழங்க முடிவு எடுத்து 2013 வருடம் முதல் தொடங்கி வழங்கி வருகின்றனர் .

இந்த வருடம் 2014 க்கு   இனிய நண்பர்   திரு  ப .திருமலை அவர்களுக்கு வழங்கும் விழா மதுரை பார்சூன் பாண்டியன் விடுதியில் மிகச் சிறப்பாக நடந்தது .விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி விழா தொடங்கியது .மூத்த பத்திரிகையாளர் 
பொன் .கிருஷ்ணசுவாமி அவர்களைப் பற்றிய குறும்படம் ஒளிபரப்பானது .அவரைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பாக இருந்தது .

பொன் .கிருஷ்ணசுவாமி அவர்களின் மகள் வரவேற்றார்கள். பேராசிரியர் கலைமாமணி ஞானசம்பந்தன்  பற்றி அவரது மாணவரும், பொன் .கிருஷ்ணசுவாமி அவர்களின் மருமகனுமாகிய   சிவராஜா அறிமுகம் செய்தார் . 
கலைமாமணி  கு .ஞானசம்பந்தன் அவர்கள் ப .திருமலை அவர்களுக்கு விருதை   வழங்கி பாராட்டி பேசினார். 

 "ஒருவர் இறந்து விட்டார் என்பதை சிந்திப்பதை நிறுத்தி விட்டார் என்பதே சரியாக இருக்கும்.பில்கேட்ஸ் கூறினார்  ." நான் படிக்கும் காலத்தில் கோல்டு மெடல் வாங்கவில்லை .ஆனால்   இன்று என்னிடம்   கோல்டு மெடல் வாங்கியவர்கள் வேலை பார்க்கிறார்கள்". மலேசியாவில் ஒருத்தர் என்னிடம் சொன்னார். கோல்டு மெடல் வாங்கி வேலை பார்க்கிறேன் என்றார் . 16 ஆண்டுகளாக ஜெயா   தொலைக்காட்சியில் தினமும் காலையில்  பேசி வருகிறான் .இன்றும் ஒரு சிலர் சோதிடம் சொல்பவர் நீங்கள்தானா என்று கேட்பவர்களும் உண்டு .எல்லோருக்கும் பிறந்த நாள் தெரியும் .ஆனால் யாருக்கும் இறக்கப் போகிற நாள் தெரியாது .அது தெரிந்தால் எப்படி இருக்கும். நான் டிசம்பர்   அவர் பிப்பரவரி என்பார்கள் .நம்மிடமே   வந்து இன்று நீங்கள் போக வேண்டிய   நாள் என்பார்கள் .அது தெரியாமல் இருக்கும் வரை மட்டுமே வாழ்க்கை சுவைக்கும் .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் என் மகன் குருவிடம் கேள்வி கேட்டார்கள் உங்கள் அப்பா சளைக்காமல் மகிழ்ச்சியாக இயங்கிக் கொண்டே இருக்கிறாரே எப்படி என்ற போது அவன் சொன்ன பதில் " அவர் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்துக் கொண்டார் .அதனால் அவர் மகிழ்வோடு இருக்கிறார்."   அவன் சொன்ன பதில் உண்மை .நாம் பார்க்கும் பணியை விரும்பி   செய்ய வேண்டும் .நண்பர் ப .திருமலை அவர்களோடு எனக்கு 25 ஆண்டுகளாக நட்பு உண்டு .எனக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் இவரிடம் கேட்டு தெரிந்து கொள்வேன் .தொடர்ந்து இயங்கி வரும் எழுத்தாளர் . பொருத்தமான மனிதருக்கு பொருத்தமான விருது. இன்னும் நீங்கள் எழுதிட தூண்டுகோல் இந்த விருது .இன்னும் பல விருதுகள் பெற   வாழ்த்துக்கள் .

தி இந்து ஆசிரியர்   திரு .அண்ணாமலை விருதாளர் ப .திருமலை அவர்களை அறிமுகம் செய்தார் .

விருதாளர்  ப .திருமலை ஏற்புரையாற்றினார் .ஏற்புரையில் 
பொன் .கிருஷ்ணசுவாமி அவர்களுக்கும் தனக்கும் இருந்த நடப்பு பற்றி நெகிழ்வாக   குறிப்பிட்டார்கள் .பொன் .கிருஷ்ணசுவாமி அவர்களின் மகள் பத்மினி நன்றி கூறினார்  .  திரு சிவகுமார் தொகுப்புரையாற்றினார் .  

மூத்த பத்திரிகையாளர் பொன் .கிருஷ்ணசுவாமி  அவர்களின் பேரன் பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தினர் , மற்றும்   திருமதி அமுதா ஞானசம்பந்தன், திருமதி ப .திருமலை ,கவிஞர் இரா .இரவி ,காந்தி கிராம பல்கலைக் கழக பேராசிரியர் ரவிசந்திரன் ,வழக்கறிஞர் சந்தான கிருஷ்ணன் , திரு. செல்வம் இராமசாமி பொறியாளர் கோவிந்தன் உள்பட   பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்

  1. மூத்த பத்திரிகையாளர் பொன் .கிருஷ்ணசுவாமி அவர்களின் நினைவினைப் போற்றுவோம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக