சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நூல்கள் வெளியீட்டு விழா !



சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில்


 நூல்கள் வெளியீட்டு விழா !

இலக்கிய இணையர் பேராசிரியர் இரா .மோகன் - பேராசிரியர் நிர்மலா மோகன் , இல .பழனியப்பன் நூல்கள் வெளியிட்டு விழா மதுரையில் மணியம்மை மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.   

புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன்அவர்கள் வரவேற்றார்.

பதிப்புத் திலகம் வானதி இராமநாதன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

நகைச்சுவைப் பேரரசர் கண.சிற்சபேசன் அவர்கள் விழாவிற்கு தலைமையேற்று நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். 

பேராசிரியர் தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன்அவர்கள் எழுதிய குறவஞ்சி இலக்கியம் நூலை ,பேராசிரியர் ஆ .முத்தையா அவர்கள்  பெற்றுக் கொண்டார். பேராசிரியர் மு .அருணகிரி அவர்கள் நூல் ஆய்வுரையாற்றினார் .

பேராசிரியர் தமிழ்த் தேனீ  இரா .மோகன் அவர்கள்எழுதிய  மீரா நூலை ,திருச்சி சந்தர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.சாகித்ய அகதமி பொறுப்பு அலுவலர் திரு . அ.சு. இளங்கோவன் அவர்கள் நூல் ஆய்வுரையாற்றினார் .

பேராசிரியர் தமிழ்த் தேனீ  இரா .மோகன் அவர்கள் எழுதிய 
தெய்வத்தமிழ் நூலை, சுவாமி சதானந்தா  அவர்கள் பெற்றுக் கொண்டார்.எழுத்து வேந்தர்  இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் நூல் ஆய்வுரையாற்றினார் .


பேராசிரியர் தமிழ்த் தேனீ  இரா .மோகன் அவர்கள் எழுதிய இலக்கிய அலைவரிசை நூலை பொறியாளர் ஜ .சுரேஷ் அவர்கள் பெற்றுக் கொண்டு நூல் ஆய்வுரையாற்றினார் .

மனிதவள மேம்பாட்டு அதிகாரி ( ஒய்வு ) திரு .இல பழனியப்பன் அவர்கள் எழுதிய நல்லுறவுகள் நூலை உலகத் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பு அலுவலர் முனைவர் க .பசும்பொன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.பேராசிரியர் தமிழ்த் தேனீ  இரா .மோகன் அவர்கள் நூல் ஆய்வுரையாற்றினார் .

வானதி பதிப்பகத்தின்  ஆஸ்தான  அட்டைப்பட  வடிவமைப்பாளர் திரு ஹாரிஸ் குகன் அவர்களுக்கு நகைச்சுவைப் பேரரசர் கண.சிற்சபேசன் அவர்கள் பொன்னாடைப்  போர்த்திப் பாராட்டினார் . 

பேராசிரியர் தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன்அவர்கள் நூலாசிரியர்கள் சார்பாக ஏற்புரையாற்றினார் .

விழாவில் கவிஞர்கள் இரா .இரவி ,முத்து இளங்கோவன், திருநாவுக்கரசு  ,அசோக்ராஜ் ,பேராசிரியர் இரவி சங்கர் ,திருமதி இரவி சங்கர், திரு. சாந்தி குமாரசுவாமி , திரு. குகசீல ரூபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

இனிய நண்பர், புரவலர் , பொறியாளர் ஜ .சுரேஷ் அவர்களின் சார்பில் விழா நிறைவில் அனைவருக்கும் சுவையான 
இரவு உணவு வழங்கப்பட்டது.  



.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்