அகவிழி பார்வையற்றோர் விடுதி சார்பாக 9 ஆம் ஆண்டு இரத்த தான முகாம் !

அகவிழி பார்வையற்றோர் விடுதி சார்பாக 9 ஆம் ஆண்டு இரத்த தான முகாம் !

மூன்றாம் பார்வை அறக்கட்டளை  நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதி சார்பாக 9 ஆம் ஆண்டு இரத்த தான முகாம் நடந்தது .அகவிழி விடுதி நிறுவனர் மனித நேய மாமணி 
மு .பழனியப்பன் வரவேற்றார். 

திரு .M.V.இளங்குமரன் தலைமை வகித்தார் .கவிஞர்
இரா .இரவி முன்னிலை வகித்தார் .எம் .பழனியப்பன் அவர்களின் தம்பி திரு. மு .கோபி வாழ்த்துரை வழங்கினார் .

காவல்துறை சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் திரு .சக்தி வேல் அவர்கள் இரத்த தான முகாமை தொடங்கி வைத்தார் . 

அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் 
எம் .பழனியப்பன் உள்ளிட்ட பல பார்வையற்றோர் மற்றும் புதூர் வாழ் பொது மக்கள் ,திரு .மு .கோபி அவர்களின் நண்பர்கள் என 100 பேர் ரத்த தானம் செய்தனர் .அரசு ராசாசி மருத்துவமனை மருத்துவர்களும் பணியாளர்களும் இரத்தம் எடுக்க உதவும் வாகனத்துடன் வந்து இருந்தனர் . 

மதுரை மெல்வின் அரிமா சங்கத்தின் பொறுப்பாளர்களும் விழாவில் கலந்து கொண்டனர் .

அகவிழி பார்வையற்றோர் விடுதி மேலாளர் திரு .N.சீனிவாசன் நன்றி  கூறினார்  






கருத்துகள்