புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!

புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! 


நூல் : புத்தகம் போற்றுதும் !

ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

 நூல் விமர்சனம் கொள்ளிடம்  காமராஜ்!

அன்பர்கள் அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கம்! "நூல் விமரிசனம்!" 
இப்பகுதியை அலங்கரிக்கும் நூல்:-

ஹைக்கூ திலகம்: திரு. இரா.இரவி அவர்கள்
எழுதிய "புத்தகம் போற்றுதும்!" எனும்
தலைப்பிலான விமரிசன நூல். 
மொத்தம் ஐம்பதுத் தலைப்பிலானத் தலைசிறந்தத் தமிழ்ச்சான்றோர்கள் எழுதிய அதியற்புத நூல்கள் குறித்த உன்னதமான உணர்ச்சிததும்பும் விமரிசனத் தொகுப்பு நூல் இது! 

இத்தொகுப்பு நூல் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கின்றார் நான்மாடக்கூடல் நகர் கவிஞர் திரு.இரா.இரவி அவர்கள். முகநூல் நண்பர்கள் சார்பில் முதலில் அவருக்கு என் நன்றி கலந்த நல்வாழ்த்துக்களைச் சமர்ப்பிக்கின்றேன்..! 

இந்நூலுக்கு மிக மிகச் சிறப்பாக அணிந்துரை
எழுதிய இலண்டனைச் சேர்ந்த கவிஞர்
திரு. புதுயுகன் அவர்களுக்கும், மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னைத் தகைசால் பேராசிரியர்
முனைவர் திரு. இரா.மோகன் அவர்களுக்கும் என் தலை தாழ்த்தியப் பணிவுகள்! 

இந்நூல் எனது மதிப்பிற்குரிய அன்புக்கவிஞர் இரா.இரவி அவர்களின் பதிமூன்றாவது (13) நூல் என்பது மற்றுமொரு தனிச்சிறப்பு..! 

இந்நூலில் வரும் தமிழ் அறிஞர் முனைவர் திரு.ம.பெ.சீனிவாசன் அவர்கள் எழுதிய நூலாகிய 'வண்டாடப் பூ மலர!'
'தமிழ்ச் சுடர்' முனைவர் திரு.நிர்மலாமோகன் அவர்கள் எழுதிய 'சங்கச் சான்றோர் ஆளுமைத் திறன்!'
முனைவர் திரு.எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி அவர்கள் எழுதிய
'பெண்ணிய நோக்கில் கம்பர்'
கவிஞர் மீரா அவர்கள் எழுதிய 'ஊசிகள்'
'கவிக்கோ' திரு. அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய
'கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை!'
'கவிவேந்தர்' திரு. மு.மேத்தா அவர்கள் எழுதிய 'ஒரு வானம் இரு சிறகு!' எனும் ஆறு விமரிசனக் கட்டுரைத் தொகுப்புகளும் அறுசுவை இலக்கிய விருந்தாய் எனக்கு அமைந்தது! 

தமிழ்மொழியை ஆய்வு செய்ய விரும்பும் தமிழ்ப் புலவர்களுக்குப் பல அரிய தகவல்களைத் தரும் தலைசிறந்தத் தமிழ் இலக்கிய வரிசை நூல்களில் இதுவும் ஒன்றெனச் சொல்லலாம்! மேலும் இக்கவிஞரின் விமரிசனத் திறமைக்கு இந்நூல் சிறப்பான ஓர் எடுத்துக்காட்டு..! 

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் தலைசிறந்த பலத் தமிழ் நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் பெருமைக்குரிய 'வானதி' பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருப்பது அன்புக் கவிஞர் திரு.இரா.இரவி அவர்களின் எழுத்து முயற்சிக்குக் கிடைத்த மற்றுமொரு பாராட்டிற்குரிய சிறப்புமிகு வெற்றியாகும்! 

இன்னும் இதுபோன்றுத் தமிழ் மொழிக்குப் பெருமை பல சேர்க்கும் சிறப்புநூல் பல வெளியிட என் இதயப் பூர்வமான நல்வாழ்த்துக்கள்! 

'புத்தகம் போற்றுதும்!' என்னும் இச்சிறப்பு விமரிசனநூல் தமிழ் அறக்கட்டளை அமைப்புகளின் பல சிறப்பு உயரிய விருதுகளையும், தமிழறிஞர்களின் பாராட்டுச் சான்றிதழ்களையும் பெறத் தமிழ்த் தாயின் திருவடிகளை நினைந்து என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்..! 

இந்நூலின் முதற்பதிப்பு: ஜுலை, 2014.
இந்நூலின் விலை: ரூபாய் 150/-
இந்நூலின் பக்கங்கள்: 224.
இந்நூல் கிடைக்குமிடம்:
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை - 600 017.
போன்: 044 - 24342810/ 24310769.
E-mail : vanathlpathippakam@gmail.com
Web: www.vanathi.in
Price: Rs.150.00.

.

கருத்துகள்