அகவிழி பார்வையற்றோர் விடுதியில் நண்பர்கள் தின விழா !புகைப்படங்கள் இனிய நண்பர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்
அகவிழி பார்வையற்றோர் விடுதியில் நண்பர்கள் தின விழா !
மூன்றாம் பார்வை அறக்கட்டளை சார்பில் நடக்கும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் நண்பர்கள் தின விழா நடந்தது .
விடுதியின் நிறுவனர் ,மனிதநேய மாமணி ,பார்வையற்ற
எம் .பழனியப்பன் வரவேற்றார் .
விடுதி மாணவர் கார்த்திக் நண்பர்கள் தின வரலாறு கூறினார் .விடுதி மாணவர் ஸ்ரீநிவாசன் பலகுரலில் பேசி மகிழ்வித்தார் விடுதி மாணவர் இராஜா பல பாடல்கள் இனிமையாகப்பாடி ,தொகுப்புரையாற்றினார் . திரு எம் .பழனியப்பன் அவர்களின் தம்பி திரு எம் .கோபி வாழ்த்துரை வழங்கினார் . விடுதி மாணவி திருச்செல்வி நண்பர்கள் தின கவிதை வாசித்தார் .கவிஞர்
இரா .இரவி தன்னுடைய 13 ஆம் நூலான' புத்தகம் போற்றுதும் ' நூலை திரு எம் .பழனியப்பன் அவர்களுக்கு வழங்கி , முன்னிலை வகித்து நண்பர்கள் மேன்மை பற்றி உரையாற்றினார் .
சூரியன் பன்பலை வானொலி அறிவிப்பாளர் செல்வி காவியா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார் . வானொலி நேயர்களான ,விடுதி மாணவர்களின் கேள்விகளுக்கு விடை அளித்தார் . செல்வி காவியா அவர்களின் தோழி சரண்யா உடன் வந்து உரையாற்றினார் . செல்வி காவியா அவர்களுக்கு இன்று பிறந்த நாள் என்று சொன்னதும் விடுதி மாணவர்கள் அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் பாடி வாழ்த்தினார்கள் .
.விடுதி மேலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார் .

கருத்துகள்
கருத்துரையிடுக