இருட்டு ! கவிஞர் இரா .இரவி !

இருட்டு !    கவிஞர் இரா .இரவி !

இருட்டு என்பது இருட்டு அல்ல !
இருட்டு என்று ஒன்று இல்லை !

ஒளிக்கீற்று வந்ததும் ஒளி வரும்  !
ஒளிக்கீற்று சென்றதும் ஒளி செல்லும் !

இருட்டு என்ற ஒன்று வருவதில்லை !
இருட்டு என்ற ஒன்று செல்வதில்லை !

இருட்டில் இருப்பதாய் வருந்தாதீர்கள் !
இருட்டு என்பதே கற்பனைதான் !

இருட்டு என்ற வருத்தம் தவிர்த்திடுங்கள் !
ஒளியை ஏற்றுங்கள் வழி கிடைக்கும்  ! 

கருத்துகள்