மதுரைக்கு வருகை தந்த சிறந்த நடிகர் ,நாத்திகர் ,இனிய நண்பர் திரு .சத்தியராஜ் அவர்களுடன் கவிஞர் இரா .இரவி .
மதுரைக்கு வருகை தந்த சிறந்த நடிகர் ,நாத்திகர் ,இனிய நண்பர்
மதுரைக்கு வருகை தந்த சிறந்த நடிகர் ,நாத்திகர் ,இனிய நண்பர்
திரு .சத்தியராஜ் அவர்களுடன் கவிஞர் இரா .இரவி .
திரு .சத்தியராஜ் அவர்களை வரவேற்று ஆயிரம் ஹைக்கூ நூல் வழங்கினேன் .மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம்.
பெரியார் திரைப்படத்திற்கு நான் எழுதிய விமர்சனம் படித்து விட்டு என்னை அலைபேசியில் அழைத்து மனம் திறந்து பாராட்டினார்கள்.ஊடகத்தில் ஈழத் தமிழருக்காக அவர் குரல் கொடுக்கும்போது அலைபேசியில் அழைத்து பாராட்டுவேன் .இப்படியே தொடர்ந்தது நட்பு . அவரது புதல்வர் சிபி திருமண அழைப்பிதழ் அனுப்பினார்கள் .சென்னை யில் நடந்த திருமணதிற்கு சென்று வந்தேன் .பல பிரபலங்கள் வந்து இருந்தபோதும் என்னை அன்புடன் வரவேற்று ஒருவரை உடன் அனுப்பி சாப்பிட வைத்து அனுப்பினார்கள் .மிகவும் அன்பானவர் .பண்பானவர் .அவருடைய நேர்முகம் பத்திரிகைகளில் கண்டால் உடன் அலைபேசி வழி குறுஞ்செய்தி அனுப்பி விடுவேன் .அவரும் உடன் நன்றி என்று குறுஞ்செய்திஅனுப்பி விடுவார் .அவற்றை நேரிடையாக பகிர்ந்து கொண்டோம் .

கருத்துகள்
கருத்துரையிடுக