கவிஞர் நெல்லை ச .சுப்பையா அவர்களின்
மணி விழா வாழ்த்து மடல் ! கவிஞர் இரா .இரவி !
மகாகவி பாரதியாரின் இயற்பெயரான சுப்பையாவை !
இயல்பாகவே இயற்பெயராகப் பெற்றிட்ட இனிய கவியே !
தமிழ்க்கடல் சுப்பையா அவர்களின் பெயர்சொல்லும் பேரனே !
தொழிற்சங்கத்தலைவர் தங்கமான சங்கரனின் தவப்புதல்வனே !

தியாகத்தின் திருஉருவம் சங்கரவடிவு அம்மாளின் பாசமகனே !
தமிழுக்குச் சங்கம் அமைத்த மதுரையில் கவிபாடிச் சிறந்தவனே !
நல்லகவி பாரதிக்கு அன்று உற்றதுணை செல்லம்மா !
நெல்லைக்கவி சுப்பையாவிற்கு உற்றதுணை லட்சுமி தேவி !
பொறியாளர் சங்கரியின் பாசமிக்க தந்தையே !
பொறியாளர் இராமகிருஷ்ணனின் பாசமிக்க மாமனாரே !
கவிதைஉறவு மேடைகளில் கவியரங்கத் தலைமை ஏற்று
கவிதை முழக்கம் செய்திட்ட கவிச் சிங்கமே !
மடை உடை வெள்ளமென கவிதை கொட்டும் !
மட்டற்ற கவிஞரே ! கவிதைக் குற்ற்லாமே !
பிறந்த ஊராம் நெல்லைக்குப் பெரும்புகழ் சேர்த்தவரே !
பாய்ந்துவரும் தாமிரபரணியாய் கவிதை வடிப்பவரே !
ஏழு நூல்களை எழுதிட்ட கவியருவியே !
எட்டாத உயரம் கவிதையால் தொட்டவரே !
கள்ளம் கபடமில்லாக் குழந்தை உள்ளம் கொண்டவரே !
கற்கண்டுக் கவிதை வடிக்கும் கவிதை மன்னவரே !
ஏர்வாடியாரின் அன்பிற்கு என்றும் பாத்திரமானவரே !
ஏர்வாடியாரின் இதயத்தில் என்றும் இருப்பவரே !
ஒருபோதும் உழைக்கச் சளைக்காத உள்ளம் பெற்றவரே !
ஓய்வில்லா உழைப்பால் உதவி மேலாளராக உயர்ந்தவரே !
பாரத மாநில வங்கியின் பெருமைகளில் ஒன்றானவரே !
பண்பில் சிறந்தவரே ! பாசத்தால் உயர்ந்தவரே !
மணிவிழாக் காணும் மணியான மாமனிதரே !

மாசில்லாப் பொன்னே !வாழிய நீ பல்லாண்டு !
.

கருத்துகள்
கருத்துரையிடுக