இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் அறக்கட்டளை சார்பில்  விருதுகள் வழங்கிய  விழா !



புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் வரவேற்றார்.

கலைமாமணி ,கவிதை உறவு ஆசிரியர்  , ஏர்வாடியார்.விழா தலைமை வகித்தார்  .

சிறந்த இதழ்  விருது மனித நேயம் !

ஆசிரியர் பேராசிரியர் ஏ.எம் .ஜேம்ஸ் !

பேராசிரியர் ஏ.எம் .ஜேம்ஸ் அவர்களின் தகுதி உரை கவிஞர் 
இரா .இரவி வாசித்தார் .


வாழ்நாள் சாதனையாளர் விருது பேராசிரியர் உலக நாயகி பழனி .

பேராசிரியர் உலக நாயகி பழனி அவர்களின் தகுதி உரை தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் வாசித்தார் .

இருவருக்கும் பொன்னாடை போர்த்தி ,  பாராட்டு மடலும், ரூபாய் 10000 ( பத்தாயிரமும் ) வழங்கப்பட்டது .

விருது பெற்ற இருவரும் ஏற்புரையாற்றினார்கள் .

பொறியாளர் ஜ .சுரேஷ் .சிற்பியின் படைப்புலகம் நூல் பெற்று சிறப்புரையாற்றினார்  .

பேராசிரியர் இராஜா கோவிந்தசாமி  விரிவான நூல் ஆய்வுரையாற்றினார்.  .

இலக்கிய இணையர் அறக்கட்டளை சார்பில் தமிழ்த் தேனீ 
இரா .மோகன் நோக்கவுரையாற்றினார். 

 நகைச்சுவைத் தென்றல் முத்து இளங்கோவன் நன்றி  கூறினார் .

இலக்கிய இணையர் குடும்பத்தினர் மற்றும்  புலவர் வேலாயுதன், முன்னாள் துணை ஆட்சியர் கருப்பையா, அருள்த்திரு கவிஞர் ஞான ஆனந்தராஜ்   ,பட்டிமன்றப் பேச்சாளர் சங்கீத் ராதா ,ஹைக்கூ கவிஞர் கம்பம் புதியவன் ,கவிஞர்கள் மு .செல்லா ,  ஞா. சந்திரன் ,முருகேசன்
 உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் சுவையான இரவு உணவு வழங்கப்பட்டது .

கருத்துகள்