நானும் இயக்குனர் ராசு மதுரவனும் !
கவிஞர் இரா .இரவி !
இயக்குனர் ராசு மதுரவன் அவர்கள் என்னை சென்னைக்கு வாருங்கள் திரைப்பட பாடல்கள் எழுதிட வாய்ப்புத் தருகிறேன் .நண்பர்களிடம் பரிந்துரை செய்கிறேன் என்று அழைத்தார் ..தற்போது உள்ள சூழ்நிலையில் பாடல் எழுதிட எனக்கு விருப்பம் இல்லாததாலும் ,பிறந்த மண் மதுரையின் மீது உள்ள பாசம் காரணமாகவும் அவரை நான் சென்னை சென்று சந்திக்க வில்லை .
.
இயக்குனர் ராசு மதுரவன் அவர்கள் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் இயக்குனர்கள் மணிவண்ணன் ,சீமான் உள்பட 10 இயக்குனர்களை நடிக்க வைத்து யாரும் செய்யாத புரட்சி செய்து இருந்தார் .சமீபத்தில் மறைந்த இயக்குனர் மணிவண்ணன் மிகச்ச் சிறப்பாக நடித்து இருந்தார்கள் .மறக்க முடியாத மிக நல்ல படம் .பாசம் ,நேசம் , பண்பாடு உணர்த்திய நல்ல படம் .மாயாண்டி குடும்பத்தார் பார்க்காதவர்கள் இருந்தால் அவசியம் பாருங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index. php?user=eraeravi
http://www.noolulagam.com/ product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
இயக்குனர் ராசு மதுரவன் அவர்கள் இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சி ஆனேன் .இயக்குனர் ராசு மதுரவன் இயக்கத்தில் வந்த மாயாண்டி குடும்பத்தார் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது .அந்தப் படத்திற்கு அன்று நான் எழுதிய விமர்சனம் இணையத்தில் காண்க http://www. tamilauthors.com/01/35.html
இந்த விமர்சனத்தை இயக்குனர் ராசு மதுரவன் அவர்களுக்கு அனுப்பி இருந்தேன் .அவர்க்கு மிகவும் பிடித்து விட்டது . படித்து விட்டு செல்லிடப்பேசியில் அழைத்துப் பாராட்டினார் .அவருடைய செல் எண் 9962958788. அவருடைய எண்ணை அழிக்காமல் அப்படியே வைத்துள்ளேன் .நான் எழுதிய விமர்சனத்தின் சுருக்கத்தை என்னுடைய புகைப்படம் ,என்னுடைய செல் எண் குறிப்பிட்டு ஒரே நாளில் எல்லா நாளிதழிலும் ,எல்லா ஊர்களிலும் வெளி வந்த மாயாண்டி குடும்பத்தார் திரைப்பட விளம்பரத்தில் பிரசுரம் செய்தார் .நாளிதழ்களில் பார்த்து நான் மனம் மகிழ்ந்தேன் .பல நண்பர்களும் பேசினார்கள் .
இதனை செய்தித்தாள்களில் படித்த ,அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய தமிழக முதல்வருமான மாண்புமிகு அம்மா அவர்கள் என்னை செல்லிடப்பேசியில் அழைத் து மிக நல்ல விமர்சனம் என்று பாரட்டினார்கள் .என்னுடைய கவிதை நூல்களையும் அனுப்பி வைத்தேன் .கவிதைகளையும் பாராட்டினார்கள்
ஜெயா தொலைக்காட்சிக்கு கவிதைகளை அனுப்பச் சொன்னார்கள் .அனுப்பினேன் ,ஒளிபரப்பானது .ஜெயா தொலைக்காட்சி காலை மலர் நிகழ்ச்சியில் எனது நேர்முகமும் ஒளிபரப்பானது .தமி ழக முதல்வரானதும் வாழ்த்து மடல் அனுப்பினேன் .சட்டமன்றத்தில் ஈழத தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியதும் பாராட்டு மடல் அனுப்பினேன் .நீதிமன்றத்தில் போராடி காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிட வைத்தமைக்கு பாராட்டி மடல் அனுப்பினேன் .இப்படி தமிழக முதல்வர் அவர்களுடன் நான் அறிமுகம் ஆகக் காரணமாக இருந்தது இயக்குனர் ராசு மதுரவன் இயக்கிய மாயாண்டி குடும்பத்தார் திரைப்படம் .இன்றைய தமிழக முதல்வருமான மாண்புமிகு அம்மா அவர்கள் என்னை செல்லில்அழைத்துப் பாராட்டிய தகவலை இயக்குனர் ராசு மதுரவன் அவர்களிடம் சொன்னபோது மிகவும் மனம் மகிழ்ந்தார் .
இயக்குனர் ராசு மதுரவன் அவர்கள் என்னை சென்னைக்கு வாருங்கள் திரைப்பட பாடல்கள் எழுதிட வாய்ப்புத் தருகிறேன் .நண்பர்களிடம் பரிந்துரை செய்கிறேன் என்று அழைத்தார் ..தற்போது உள்ள சூழ்நிலையில் பாடல் எழுதிட எனக்கு விருப்பம் இல்லாததாலும் ,பிறந்த மண் மதுரையின் மீது உள்ள பாசம் காரணமாகவும் அவரை நான் சென்னை சென்று சந்திக்க வில்லை .
.
இயக்குனர் ராசு மதுரவன் அவர்கள் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் இயக்குனர்கள் மணிவண்ணன் ,சீமான் உள்பட 10 இயக்குனர்களை நடிக்க வைத்து யாரும் செய்யாத புரட்சி செய்து இருந்தார் .சமீபத்தில் மறைந்த இயக்குனர் மணிவண்ணன் மிகச்ச் சிறப்பாக நடித்து இருந்தார்கள் .மறக்க முடியாத மிக நல்ல படம் .பாசம் ,நேசம் , பண்பாடு உணர்த்திய நல்ல படம் .மாயாண்டி குடும்பத்தார் பார்க்காதவர்கள் இருந்தால் அவசியம் பாருங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
http://www.noolulagam.com/
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கருத்துகள்
கருத்துரையிடுக