இயக்குனர் மணிவண்ணன் மணியான மனிதர் ! கவிஞர் இரா .இரவி !
கதையாசிரியர் வசனகர்த்தா உதவி இயக்குனர்
உதவி இயக்குனர்கள பலரை உருவாக்கியவர் !
அவருடைய இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு !
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index. php?user=eraeravi
http://www.noolulagam.com/ product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கோவை அருகே உள்ள சூளுரில் பிறந்தவர் !
கோடம்பாக்கத்தில் சூறாவளியாக சுழன்றவர் !
அய்ம்பது திரைப்படங்கள் இயக்கியவர் !
நாணூறு திரைப்படங்கள் நடித்தவர் !
வெண்தாடி வேந்தரின் பகுத்தறிவுக்கருத்துக்களை !
கருந்தாடி வைத்து திரையில் உரைத்தவர் !
மனிதநேயம் மிக்க மாமனிதர் மணிவண்ணன் !
மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்தவர் !
கதையின் நடிகர் இயக்குனர் என்று வளர்த்தவர் !
உச்சம் செல்ல வழி வகுத்துத் தந்தவர் !
ஈழத்தமிழர்களுக்காக உரக்கக் குரல் கொடுத்தவர் !
ஈழத்தமிழர்களின் விடுதலையை விரும்பியவர் !
நூல்களை வாசிக்கும் நூல்களின் நேசர் !
நூல்களில் சிறந்ததைப் பரிந்துரை செய்தவர் !
ஆணவம் இல்லாத எளிமையான மனிதர் !
அனைவரும் விரும்பிய அன்பு மனிதர் !
நெசப்பாக்கத்தில் வாசித்த நேசக்காரர் !
நெஞ்சில் பட்டதைப் பேசும் பாசக்காரர் !
தன் உதவி இயக்குனர்கள் இயக்குனரானால்
தன்னால் முடிந்த உதவிகள் செய்தவர் !
மற்ற இயக்குனர்கள் போல என்றும்
மனதில் பொறாமை கொள்ளாதவர் !
சீடர்களின் வளர்ச்சியில் பெருமைப்பட்டவர் !
சின்னப் புத்தி என்றும் இல்லாதவர் !
நடிகர்கள் பலர் வளரக் காரணமானவர் !
நடிப்பைப் பலருக்குக் கற்றுத் தந்தவர் !
வசனத்தை இயல்பாகப் பேச வைத்தவர் !
வஞ்சகம் இல்லா மனதைப் பெற்றவர் !
அரசியல்வாதிகளின் பித்தலாட்டத்தை !
அச்சம் இன்றி தோலுரித்துக் காட்டியவர் !
வெண் திரையில் அற்புதமாக நடித்தபோதும் !
வாழக்கையில் யாரிடமும் நடிக்காதவர் !
எள்ளல் சுவையுடன் கோவைத் தமிழில் !
நாகராஜா சோழன் வரை எழுதியவர் !
அவருக்கு இணை அவர் மட்டுமே !
இயக்குனர் மணிவண்ணன் மணியான மனிதர் !
நன்றி
இயக்குனர்களின் முன்மாதிரியான மனிதர் !
ஈழக்கொடி போர்த்தி உறங்குகிறாய் !
ஈழக் கனவு விரைவில் நனவாகும் !
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
http://www.noolulagam.com/
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
தாங்கள் விரும்பினால் தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் வந்து செல்லும் அமர்க்களம் கருத்துக்களத்தில் தங்கள் பதிவுகளை பதியலாம்..
பதிலளிநீக்குதள முகவரி.: http://www.amarkkalam.net/