தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

அறிஞர் அண்ணா அவர்களால் தமிழகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட காங்கிரஸ் இன்று வரை தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க இயலவில்லை. நடந்து முடிந்த தமிழக சட்மன்றத் தேர்தலில், தி .மு.க உடன் கூட்டணி வைத்தும் ,படு தோல்வியை சந்தித்தும் இன்னும் திருந்த வில்லை . முன்னாள் குடியரசுத் தலைவர்கள் கே ஆர்.நாராயணன்,மானிதர் அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுவை நிராகரிக்காமல் வைத்து இருந்தனர் .சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் காலத்தில் ஒரு கருணை மனு கூட நிராகரித்தது இல்லை .ஆனால் தற்போது பொம்மை குடியரசுத் தலைவர் மூலமாக கருணை மனுவை நிராகரிக்க வைத்து ,சிங்கள
ப் பங்காளி ராஜ பட்ஜெயின் குற்றத்தைத் திசை திருப்பப் பார்கின்றது .காங்கிரசின் அழிவு காலம் நெருங்கி விட்டது .

காங்கிரஸ் அன்னா ஹசாரே உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் தவறான அணுகுமுறையின் காரணமாக அகில இந்திய அளவில் மதிப்பையும், மரியாதையும் இழந்து . தன் முகத்தில் தானே கரி பூசி வருகின்றது .தற்போது மூன்று பேருக்கு
த் தூக்குச் சொன்னதன் காரணமாக உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பகை ஆனது காங்கிரஸ் .இனி மானமுள்ள தமிழர் எவரும் காங்கிரசில் இருக்க மாட்டார்கள் .தமிழகத்தில் மட்டும் அல்ல, அகில இந்திய அளவில் மக்கள் காங்கிரசைத் தூக்கி எறிய, காங்கிரசே வழி வகுத்து வருகின்றது .காங்கிரஸ் வேரோடும் ,வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய வழி வகுத்து வருகின்றது .

முன்பு கேரளாவில் தடுத்து நிறுத்தியது போல தமிழக முதல்வர் தூக்குத் தண்டனையை
த் தடுத்து நிறுத்த முன் வர வேண்டும் .காங்கிரசின் முகத்தில் கரி பூச தமிழகமுதல்வருக்கு நல்ல வாய்ப்பு .ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் .மூன்று தமிழர்களின் உயிரைக் காக்கலாம் .திட்டங்களில் தமிழகத்தை வஞ்சிக்கும் காங்கிரசை அவமானப் படுத்தலாம் .விலங்கு நேயத்தோடு ஆடு ,கோழி வதைத்தடுப்புச் சட்டம் முன்பு ஆட்சியில் இருந்த போதுக் கொண்டு வந்த முதல்வர் அவர்கள் மனித நேயத்தோடு மனிதை வதைத் தடுப்பு சட்டம் கொடு வர வேண்டும் .தமிழர்களின் வாக்கின் காரணமாகவே ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருக்கிறீர்கள் .தமிழர்களின் உயிரை காக்க வேண்டியது உங்கள் கடமை .


நீதி மன்றத்தில் தூக்குத் தண்டனைக்கு தடை வரப்போவது உறுதி .அதற்கு முன் தமிழக முதல்வர் அறிவித்தால் பெருமை வந்து சேரும் .தங்களை தேர்தலில் ஆதரித்த புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ண சாமி.மற்றும் தங்கள் வெற்றிக்கு உதவி புரிந்த நாம் தமிழர் சீமான் ஆகியோரின் விருப்பதிற்காகவும் , வாக்களித்த இன உணர்வு மிக்கத் தமிழர்களுக்காகவும் ,காங்கிரஸ் படுகொலை செய்யத் துடிக்கும் மனித நேயமற்ற செயலை
த் தடுக்க முன் வர வேண்டும் .
--


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்