ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

காவிரி போல
அரசியலானது
கல்வி

இனிமையானது
உற்றுக்கேளுங்கள்
ஓடும் நதியின் ஓசை

பெண்ணைவிட
ஆணே அழகு
மயில்

முடிந்தது சந்திப்பு
தொடர்ந்தது அதிர்வு
நினைவலைகள்

பிரித்தது இலைகளை
மரத்திலிருந்து
காற்று

குளத்தின் உயரம் கூட
தானும் வளர்ந்தது
தாமரை

உண்மையை விட
போலிகள் பொலிவாக
செயற்கைச் செடிகள்

கோலத்தை விட
கோலமிட்டவள்
கொள்ளை அழகு

தோற்றத்தை விட
குரல் அழகு
குயில்

சம்மதித்தனர்
வரதட்சணை
க் குறைக்க
சொத்து வரும் என்பதால்

வா வை விட
ஏ பொருந்தும்
வேலை வாய்ப்பு அலுவலகம்

வருட வருமானம் லட்சத்தில் அன்று
மாத வருமானம் லட்சத்தில் இன்று
நிம்மதி ?
பலன் இல்லை
பெயர் மாற்றுவதால்
எண்ணம் மாற்று

பலவீனம்
பறை சாற்றுதல்
சோதிடம் பார்த்தல்

மாதா பிதா
குரு
மனைவி

கோபத்தைக் குறைக்கும்
இதயத்தை இதமாக்கும்
இலக்கியம்

முக்காலமும் வாழ்பவர்
எக்காலமும் வாழ்பவர்
திருவள்ளுவர்

தமிழ் என்ற சொல்லின்றி
தமிழுக்கு மகுடம் சூட்டியவர்
திருவள்ளுவர்

தமிழன் என்ற சொல்லின்றி
தமிழினத்திற்கு பெருமை சேர்த்தவர்
திருவள்ளுவர்

உலகின் முதல்மொழி
மொழிகளின் தாய்மொழி
தமிழ்

இலக்கண இலக்கியங்களின்
இனிய சுரங்கம்
தமிழ்

யுகங்கள் கடந்தும்
இளமை குன்றாதது
தமிழ்

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்