நூல் அறிமுகம்
நவம்பர் 01-15_2010 |
நூல் : மனதில் ஹைக்கூ
ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி
வெளியீடு : ஜெயசித்ரா
வடக்கு மாசி வீதி, மதுரை - 625 001.
பக்கங்கள் : 64 விலை: ரூ 40
நடைமுறை வாழ்க்கையில் காணுகின்ற காட்சிகளைக் கருத்தோவியமாய் - ஹைக்கூவாய் ஒளிரச் செய்துள்ளார் கவிஞர். சூழல், சமுதாயச் சிந்தனை, நிருவாகக் கோளாறு.... என்று வாழ்க்கை யின் ஒவ்வொரு அங்கமும் அலசி ஆராயப் பட்டுள்ளது.
விளைவித்தன கேடு/
கண்களுக்கும் மனதிற்கும்/
தொ(ல்)லைக்காட்சிகள்
யாரும் பார்க்கவில்லை கடவுளை /
எல்லோரும் பார்க்கின்ற சாத்தான்/
தொ(ல்) லைக்காட்சி
என்று சிறுவர் முதல் பெரியவர்வரை அனைவரையும் அடக்கி ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிபற்றிய வரிகள் மக்களைச் சிந்திக்க வைப்பன.
ஜோதிடம் என்ற போர்வை மக்களை மூடநம்பிக்கையினுள் மூழ்கடித்திருப்பதை,
எதிர்காலம் அறிவதாக /
நிகழ்காலம் வீணடிப்பு/
சோதிடம்,
மடக்கட்டங்கள் கணித்து/
மனக்கட்டடங்கள்தகர்ப்பு/
சோதிடம்
என்று குமுறியுள்ளார் கவிஞர்.
படிக்காவிட்டாலும்/
பாடமாகுங்கள் மருத்துவ மனைக்கு/
உடல்தானம்
விழி இழந்தவருக்கு /
விழி ஆகுங்கள் /
ஒளி ஏற்றுங்கள்
என்று சமுதாய விழிப்புணர்வுக்கு வித்திட்டுள்ளார்.
பரபரப்பான உலகில் பெற்றோரின் மீது பிள்ளைகள் காட்டும் வெறுப்பினை,
குஞ்சுகள் மிதித்து/
கோழிகள் காயம்/
முதியோர் இல்லம்
என்ற புதுமொழி படைத்து துணுக்குற வைத்துள்ளார்.
மொத்தத்தில், மனதின் உள்ளக் குமுறல்களை மூன்றே வரிகளில் முத்தாய்ப்பாய் முத்திரை பதித்து படிப்போர் மனதினைத் தென்றலாகத் தீண்டி மகிழ்ச்சியுற வைப்பதே மனதில் ஹைக்கூ.
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக