என்னவள் – நூல்விமர்சனம்


என்னவள் – நூல்விமர்சனம்- முனைவர் ச. சந்திரா

என்னவள் நூல்ஆசிரியர்-(இரா.இரவி)
இளைய தலைமுறையினரின் இதயத்தை ஈர்க்கும் இலக்கிய முத்துக்கள்…

கோபுர வாயில்:

கவிஞர் இரா.இரவியின் ஐந்தாவது மைல் கல்லான இந்த தொகுப்பு அழகியலும் அன்பியலும் கலந்த அபூர்வ படைப்பு. பாசத்தின் தன்மையை வாசகர்க்கு வலியுறுத்த வந்த பாங்கான நூல் எனலாம். ஒன்றைச் சொல்வதன் வழி மற்றொன்றை வலியுறுத்த வந்த உளவியல் சார்ந்த நூல் என்றும் இதனைக் கூறலாம். உடலியல் மறுத்து, உலகியல் கூற வந்த உயிரோட்டமான படைப்பு இந்த |என்னவள்|. இயலாமையை மறைமுகமாகச் சொல்லி, இருப்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வரவழைக்கும் மனோதத்துவ நூலை சிறிது புரட்டிப் பார்போமா? புரட்டும் முன்…

முன் அட்டைப்படம் சொல்லும் செய்தி:

|உலக மாந்தர்களை அகக்கண் கொண்டு நோக்கும் பொழுது அனைத்தும் நிஜமாகும்! புறக்கண் கொண்டு நோக்கினால் போக்கிரித்தனமே மிஞ்சும்! ஏந்தக் கண் கொண்டு பார்த்தாலும் உன்னைக் கண்காணிக்க உன் பின்னால் எவரேனும் இருப்பர்| என்று மணியடித்து எச்சரிக்கின்றது முன் அட்டைப்படம்!

பின் அட்டைப்படம் சொல்லும் செய்தி:

||நீங்களும் நானும் வௌ;வேறு திசைகளில் வெகு தூர இடைவெளியில் இருப்பினும் நம்மிருவரையும் என்றேனும் ஒரு நாள் |கவிதாதேவி| நெருக்கத்திற்கு உள்ளாக்குவாள்|| என வித்தக கவிஞரிடம் மெல்லிய குரலில் கவிஞர் இரா.இரவி சொல்வது போல் அமைந்துள்ளது பின் அட்டைப்படம்.

கைதியா? நீதிபதியா?

கவிஞர் இரா.இரவியின் “என்னவள்” -எனும் கவிதை தொகுப்பில் நிழல் நிஜமாகின்றது ; நிஜம் நிழலாகின்றது. ஏக்கமும் தாக்கமுமாய், வேண்டுதலும் விடைபெறுதலுமாய், அன்பும், பன்புமாய், உயர்ச்சியும், வீழ்ச்சியுமாய், வினாவெழுப்பி விடை கூறி, நினைவுகளோடு வாழ்ந்து கனவுகளோடு கைகோர்த்து உலவுகின்றார் கவிஞர். இந்த நூலில் இடம் பெறும் கதாநாயகி கவிதைக்கு கருவாகி, இடையிடையே காந்தமாகி, சில நேரம் ஏணியாக, பல நேரம் வாழ்வெனும் சமுத்திரத்தைக் கடக்க உதவும் தோணியாக உருவெடுக்கின்றாள். நாயகனோ – நாயகியின் கட்டளைக்குச் செவி சாய்த்து, சில வேளை நீதிபதியாய், பல வேளை நினைவுச் சிறைக்குள் அகப்பட்ட கைதியாய், மனம் இலயித்தும் தொலைத்தும், உருகியும் மருகியும் இறுதியில் எங்கு செல்வது எனத் தெரியாமல், புரியாமல் எழுதுகோலுக்குள் புகந்து கவிதை வானில் பயணிக்கத் துவங்கி விடுகிறார். வாசகர்களைச் சிந்திக்க வைத்துவிட்டு, தான் மட்டும் சிறகடித்துப் பறக்க முற்படுகிறார் கவிஞர்.

கல்வெட்டாய் பதிந்த காவியக் கவிதை: “என்னவளே!
காதலுக்கும் நட்புக்கும்
இடைவெளி ஒரு நூல் தான்
அந்த நூல் அறுந்தால்
காதலும் மலரலாம்
நட்பும் முறியலாம்
நட்பு முறியுமென்றால்
காதல் வேண்டாம்
நண்பர்களாகவே இருப்போம்”!

மனமார…

அதீத பாசக் கடலில் அமிழ்ந்து கிடைக்கும் இளைய தலைமுறையினர் – வெறுப்பும் விரக்தியும் ஒரு சிறிதும் இல்லாத இந்த “என்னவள்” – நூலை வாசித்து உணரும் வேளையில் அவர்களுக்கெல்லாம் உலக உண்மைகள் தெரியவரும் ; உளவியல் புரிய வரும் ; உடலியல் தெளிவு வரும்! வாழ்வை வெல்லும் வல்லமையைப் பெருக்கின்ற ஆற்றல் உச்சக்கட்டப் பாசத்திற்கு உண்டு என்ற உயர் தத்துவம் மனதில் புரியும் ! வாழ்வில் இழப்பையும் தவிப்பையும் ஒதுக்கி விட்டு, இதயத்திற்கு மரியாதை அளிக்கக் கற்றுதரும் இனிய நூலாம் என்னவளைப் படித்துப் பயன் பெறுங்கள் ! பண்போடு வாழலாம். கவிஞர் இலக்கியப் பயணம் இடைவிடாது கவிதைச் சாலையில் பயணிக்க உளமார்ந்த வாழ்த்துக்கள்.
என்னவள்

என்னவள்,நூல் விமர்சனம்: கவிஞர்
ரா.பரிமளாதேவி

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.ரவி

வெள்ளைத்தாளை கல்வெட்டுக்களாய் சித்தரித்த கவிஞரின் ஓவிய வரிகளை தீட்டுவதற்கு
தூரிகைதாம் என்ன தவம் செய்ததோ?

ஓய்வறியா சிந்தனையில் உதித்திட்ட வார்த்தைகளுக்கு வசந்தம் வந்து விட்டதோ?!

இப்படிக் கவிதைப் பூக்களை(பாக்களாய்) பூப்பதற்கு வார்த்தைகளை
எளிமையாக்கி,வாசிப்பாளனை கனமாக சிந்திக்க செய்கிறது. இவரது கவிப்பூக்கள்.

காதலின் வெற்றியே இது தான் தனது துணையின் மகிழ்ச்சி தான் முக்கியம் என்பதை
சிறப்பிக்கிறார் கவிஞர் இப்படி.

“உன் மகிழ்ச்சி பாதிக்குமென்றால் இணைப்பை விட
பிரிவே எனக்கு சம்மதம்” என்று.

“பட்டாம்பூச்சி அழகா” எனும் கவிதையில் வாய்மொழி கூறும் அந்த வண்ணத்துப் பூச்சி
தான் ( பெண்) என்ன தவனம் செய்ததோ! கவிஞரின் தீர்ப்பு சரி தான்.

காதலில் தோற்றவர்களே அதிகம். அதிலும் தோல்வியாளர் பட்டியலில் சேர்த்தற்கு நன்றி
என்கிறார். *கவிஞரின் பார்வையில் தோல்வியும் சுகமோ*….

மறந்தால் தானே நினைப்பதற்கு. என்பதை மறைமுகமாக சொல்லும் விதம் அருமை.

காதலில் கூட தேசப்பற்றுடன் இருக்கிறார். கவிஞர்
“தினமும் என்னைப் பாராட்டு,நாடு செழிக்கட்டும் “என்கிறாரே…

புரிந்ததும்,புரியாதது போல இருப்பது தானே காதலில் சுவராஸ்யம் என்கிறார் கவிஞர்

தன் இணை எதற்கும் இணையில்லை என்பதை இப்படியும் சொல்லலாமோ..

உள்ளத்தைப் போலவை உருவமும் பிரதிபலிக்கிறதோ?(அக) கண்ணாடியில்.

உள்ளம் கவர்ந்தவளே உந்து சக்தியாக இருக்கும் போது சுறுப்பிற்குக் குறைவுண்டோ?

“காதலியர் கடைக்கண்ணால் பார்த்து விட்டால்,மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர்
கடுகாம்” என்ற பாரதியின் வரிகளை நினைவுபடுத்துவதைப் போல் உள்ளது. இக்கவிதை

“காதலின் சக்தி வலிமையானது தானே”

(மனதில்) இளமையும்,புதுமையும் கொண்டது தான் காதல். மேலும் இவ்வுலகில் காதல்
மட்டுமே மாறாதது என்பதை கூறுகிறார் கவிஞர்.

பாவையின் பார்வையில் வீழ்ந்து விபத்து உள்ளமான மனம் பஞ்சுத்தூவியினால்
(சிறகு)ஆன உணர்வு ஏற்படுவது சகஜம் தானே…

“காதலில் இழப்பு இல்லை. இனிய உணர்வு உண்டு” காதலின் மென்மையைச் சொல்ல இதைவிட
வேறு வாத்தையும் வேண்டுமோ?

தன் காதலியிடம் ஆயள் நீடிப்பதற்கு “நேச” மருந்து கேட்கும் காதல் நோயாளியாகிப்
போனாரோ-காதலன்.

“மணம்” புரியாவிட்டாலும்,”மனம்” புரிந்து கொண்டவர்கள் “நாம் இணையாததால் தான்
இருவரும் இறுதி வரை நினைத்திருப்போமே” இப்படி சொல்கிறார் கவிஞர்.

இதயத்தின் வாசல் கண்கள் தானே….இதற்கு விளக்கமும் தேவையயோ…

மைனசை பிளஸாக மாற்றி யோசிக்கும் மரியாதைக்குரிய கவிஞர் தான் இவர்.

காதலர் உலகதே தனி தானே உரியவரிடம் “உள்மன” உடையாடலில் ஈடுபட்ட காதலர் இப்படித்
தான் சுற்றுச் சூழல் மறந்து தானாகப் பேசிக் கொள்வார் என்கிறார் கவிஞர்.

காதலனின் நெஞ்சூஞ்சலில் சதா ஆடிக் கொண்டிருக்கும் அவள் நினைவுகள் அப்டினு
சொல்லலாம் தானே.

வருத்தத்தைக் கூட வசந்தமாக்கி வாழ்ந்து காட்டும் தன்னம்பிக்கை வரிகள் “எத்தனை
முறை முயன்றும் கிடைக்கவி;ல்லை நீ எனக்கு. வருந்தவில்லை. நான் வசந்ததமாக்கினேன்
வாழ்க்கையை” மிக அற்புதம்.

பூவையர் பூச்சூடினாலே பூக்கள் பெருமை கொள்ளும். ஆதிலும் தன் தலைவியின் கூந்தல்
ஏறியதால் பூக்கள் அத்தனை அழகு பெறுகிறது.

இதயமெல்லாம் காதலியின் நினைவாக இருக்கும் போது,யாராவது அவளின் “திருநாமத்தை”
உச்சரிக்கும் போது,உடனே கவனிப்பதில் வியப்பில்லை…….

தலைவியிடம் தன்னை சமர்பித்தபின் அவனை அடையாளம் காட்ட அவள் ஒருத்தியினால்
மட்டுமே முடியும் என்பதுதானே உண்மை.

ஆம் ஏற்கனவே மனச் சட்டத்தில் அவளின் உருவம் மாற்றப்பட்டு விட்டதே… மீண்டும்
எதற்கு.

அகத்தையும்,புறத்தையும் அழகுபடுத்த அவள் ஒருத்தியினால் தானே முடியும்.

“நீ எது பேசினாலும்,நீ பேசுவதே அழகு” என்று ஒரு ரசிகனாக மாறிய காதலனை அடைவதற்கு
தலைவி செய்த தவம் என்னவோ… என்று வியக்க தோன்றுகிறது.

நேசம் அதிகரிக்கும் போது தோல்வியும் சுகமே.

“சகியும்” சமுதாயமும் ஒன்றாகவே தெரிகிறதோ!நம் கவிஞர்களுக்கு.
காதல்ர்களுக்கு கற்றுத் தரும் புது வகை கணக்காக உள்ளதே…..

“நினைவு முழுவதும் நீயாய் இருக்கும் போது நினைவுப் பரிசு எனக்கு எதற்கு? என்ற
வரிகள் நினைவுகளை நினைவிழக்க செய்து விட்டதே..

காதலை விட நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் நமது கவிஞரின் நட்பிற்கு நன்றிகள்
பல…சொல்லலாம்.

ஓரு பொய் உயிர் வளர்ந்து உண்மையாகி விடுமே…

மொத்தத்தில் எல்லாவற்றிலும், ‘நீயே” என்கிறாரோ…

எல்லாவற்றையும் …



--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com

http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்