ஹைக்கூ ஆற்றுப்படை நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் கவிவாணன்


ஹைக்கூ ஆற்றுப்படை
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி
நூல் விமர்சனம் கவிஞர் கவிவாணன்

சங்க இலக்கியம் தொட்டு ,இக்கால இலக்கியம் வரை ,கவிதை தனக்கான
தொரு தளத்தை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது .
புதுமையைக் கண்டு பேதலிப்பவர்கள் கூட சில சமயம் புதுமையைக்
கொண்டாடக் கூடும் .
சொல் புதிது
பொருள் புதிது
ஜோதிமிக்க நவகவிதை
என்ற பாரதியின் கவிதையைப் போல பல முனைகளில் நின்று கவிதைகுறித்த ஆளுமைகளை பதியம் போட வேண்டிய காலமிது .

இதை மனதில் கொண்டு நடப்பதில் நதியாகவும் ,கடப்பதில் காற்றாகவும்
நாம் செயல் கொண்டால் ,கவிதைகள் மீது மையல் கொண்டால் ஆகச் சிறந்தப் படைப்புகளை தமிழில் கொடுவர முடியும் .என்ற அடர்த்தியான
நம்பிக்கை எனக்கு இருக்கிறது .
ஆற்றுப்படுத்துதல் அவசியம் அதோடு ஆற்றுப்படையும் அவசியம்.
சங்ககால ஆற்றுப்படை ஒன்றை வலிமை பெற செய்தது என்றால்
ஹைக்கூஆற்றுப்படையும் பன்நோக்கோடு ஒன்றைப் பதிவு செய்கிறது .
அது கவிதை .
ஹைக்கூ ஆற்றுப்படை வாசிக்க த்துவங்கும் போதும் வாசித்து முடிக்கும் போதும் அது மூன்றை முன் நிறுத்துகின்றது .
1.ஹைக்கூ ஆற்றுப்படை வாசிக்கும் துவக்க வாசகனாக வருகிறவனுக்கு ஹைக்கூ ஆற்றுப்படை ஆற்றுப்படுத்தும்.
2.ஹைக்கூ கவிதையின் அனுபவத்தில் வாசகனும் ஒரு கூட்டுப்
படப்பாளியாக்கவும் ஆற்றுப்படுத்தும்.
3.ஹைக்கூ கவிதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல
சக பயணியாக ஆற்றுப்படுத்தும்..
ஹைக்கூ கவிதைகளின் இன்றைய, நாளைய தேவைகளை கணக்கில் கொண்டும்.தன்னுடைய நீண்ட தேடலின் விளைவாகவும் ,படைப்பாளனை சக படைப்பாளனே அடையாளப்படுத்தும் நோக்கத்தோடும் ,மிகுந்த அக்கறையோடும் ,எந்தப்படைப்பாளியும்
காயப்பட்டு விடக்கூடாது. என்ற பண்பு மிக்க கவனத்தோடும்
மிக நுட்பமாக படைத்து இருக்கிறார் இரவி .

தமிழில் ஹைக்கூ கவிதையை துவக்க காலம் தொட்டு இடைவிடாத
இயக்கமாகக் கொண்டு செயல்படும் பல மூத்த படைப்பாளிகளையும் ,
தன்னோடு பயணிக்கும் சக படைப்பாளிகளையும்,புதிய இளைய படைப்பாளிகளையும் அவர்களின் ஹைக்கூ நூல்களை விமர்சன்ப்பார்வையோடு பதிவு செய்து இருக்கிறார் .இந்த நூல் இரா .இரவிக்கு கட்டுரையில் ஹைக்கூ பற்றிய பதிவுகளில் துவக்கம்தான் .
இன்னும் அவர் பயணம் தொடரும் .தொடர வேண்டும் .
ஹைக்கூ ஆற்றுப்படை
மலர்ந்து மனம் வீசுகிறது
வாழ்த்துக்கள் .
பூக்கும் பூவின் நோக்கம்
எதை நோக்கியது?
தோளிலா?
தரையிலா ?
எதுவாயினும் அது ஆராய்வதில்லை
ஆராயப்படும்போது அது
பொதுமை பெறாது .
பொதுமையாக்கப்ப்படும் எதுவும்
ஆராயப்படாது .
அப்படி பூத்து இருக்கிறது
அர்த்தமுள்ள ஆழத்தோடு
பொருத்தமான ஆற்றலோடும் .
குறிப்பு .இரா .இரவியின் முன்னுரையில் அழுத்தமில்லை



--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com

eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!


கருத்துகள்