உலக எழுத்தாளர்கள் மாநாட்டை கொலைக் களமான இலங்கையில் நடத்துவது ஏன்? மறு பரிசீலனை செய்யுங்கள்

உலக எழுத்தாளர்கள் மாநாட்டை கொலைக் களமான
இலங்கையில் நடத்துவது ஏன்?


மறு பரிசீலனை செய்யுங்கள்

இலங்கைக்கு சென்ற அசினுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
நடிகர் கருணாஸ் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டது .
கொள்கை இல்லாத கோமாளிகளே போக வேண்டாம்
என்று சொல்லும் போது
லட்சியத்துடன் சிற்றிதழ் நடத்தும் நல்லவர்கள்,
படைப்பாளிகள், எழுத்தாளர்கள் இலங்கை செல்வது சரியா ?
சிந்தித்துப் பாருங்கள்
லட்சக் கணக்கான தமிழ் மக்களை
கொன்று குவித்த அரக்கனுக்கு
தண்டனை ஐநா மூலம் வாங்கித் தராமல்
தமிழினம் ஓயாக் கூடாது.உலகில் வேறு எங்கு வேண்டுமானாலும் நடத்துங்கள்

குற்றவாளி தண்டிக்கப் படும் முன்
கொலைக் களத்தில்இலங்கையில்
மாநாடு நடத்த வேண்டிய
அவசியம் என்ன?
சிற்றிதழை மிகவும் மதித்து
சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும்
படைப்பாளியின் வேண்டுகோள் .
சிங்களன் விரிக்கும் வலையில்
படைப்பாளிகள் விழக் கூடாது..
சிங்களனின் பிரித்து ஆளும்
சூழ்ச்சிக்கு தமிழனம் பலி ஆகக் கூடாது..
இரா .இரவி
www.kavimalar.com
http://tamilparks.50webs.com/tamil_padaipugal/ravi_madurai.html
http://eraeravi.wordpress.com/
http://eraeravi.blogspot.com/
www.tamilauthors.com

கருத்துகள்