‘மாண்புமிகு மனைவி’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் மதிப்புரை : திருமதி. இர. ஜெயப்பிரியங்கா, M.A., M.Ed.,
‘மாண்புமிகு மனைவி’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி
நூல் மதிப்புரை : திருமதி. இர. ஜெயப்பிரியங்கா, M.A., M.Ed.,
நூல் வெளியீடு : வானதி பதிப்பகம்,
23, தீனதாளு தெரு,
தியாகராய நகர்,
சென்னை – 600 017.
விலை : 126 பக்கங்கள் : 125
இந்நூல் ஐயா அவர்களின் 39-ஆவது நூல். ஐயா அவர்களின் மற்ற நூல்களை படிக்கும் ஆர்வமும் மகிழ்ச்சியும் இந்நூல் வாசிக்கும் போது எனக்கு இல்லை. கவிஞர் இரா. இரவி (ஐயா)-வின் மனைவி திருமதி இர. ஜெயச்சித்ரா (அம்மா) திடீர் என்று சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். ஐயா அவர்கள் அம்மா விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்த போது முகநூலில் பதிவிட்டு இருந்தார். தகவலை பார்த்ததும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அந்த நேரத்தில் ஐயாவை அலைபேசியில் அழைத்து ஆறுதல் தர எனக்கு பேச முடியவில்லை. ஏனெனில் ஐயாவின் குடும்பத்திற்கு ஆணிவேரே ஜெயச்சித்ரா (அம்மா) தான் ஐயாவின் வாழ்க்கை வரலாறு நூல் ஒன்று பேராசிரியர் முனைவர் சங்கீத்இராதா அவர்கள் நூல் எழுதியிருந்ததை நான் படிததிருக்கிறேன். ஐயாவின் இரு மகன்களையும் நல்ல முறையில் படிக்க வைத்தது. குடும்பத்தை நல்லமுறையில் நடத்தி சென்றது அம்மா தான். ஐயா தன்வேலை இலக்கியபணி என்று இருந்துவிடுவாராம்.
அம்மா அவர்களை ஐயாவின் இரண்டாவது மகன் திருமணத்தில் பார்த்திருக்கின்றேன். சாந்தமான முகம் எல்லோரையும் இன்முகத்துடன் வரவேற்றார்கள். அம்மாவை பற்றி மாண்புமிகு மனைவி நூல் வழியாக ஐயா அவரின் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
இரு குடும்பத்தாரிடமும் அன்பாக நடந்துகொள்வது. இனிப்பு பலகாரம் என எது செய்தாலும் உறவினர்களுக்கும் தருவது. அம்மாவைப் பற்றி முக்கிய தகவல் இங்கு கூறவேண்டும். வருடம் வருடம் தான் செய்து குலோப்ஜாமுனை அகவிழி பார்வையோர் விடுதிக்கு ஐயா மூலமாக (அரிசி, பருப்பு, புத்தாடை, பணம்) என தீபாவளி, பிறந்தநாள், திருமணநாளுக்கு அனுப்பிவிடுவார். நான் ஐயாவின் வலைப்பதிவில் பார்த்திருகின்றேன்.
ஐயா உடல்நலமில்லாமல் இருந்த போதெல்லாம் பத்திய உணவு சமைத்து தந்துள்ளர். தனக்கு இலக்கிய ஈடுபாடு இல்லை என்றாலும் ஐயாவின் இலக்கிய பணியை தடுக்காதவர். அம்மா இறந்துவிட்டார் என்பதையே இன்றுவரை என்னால் ஏற்க இயலவில்லை.
நூலின் முன்பகுதியில் அம்மாவை பற்றி தகவலும் பின்பகுதியில் பல்வேறு பிரபலங்களுக்கு ஐயாவின் புகழ்வணக்க கவிதையும் இடம்பெற்றுள்ளது.
அம்மாவின் ஆசைபடி ஐயா நீண்டநாள்கள் உடல்நலத்துடன் வாழ்ந்து தமிழுக்கு பல்வேறு படைப்புகள் வழங்கிட வேண்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக